மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!

|

நாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது, குறிப்பாக தமிழத்தில் கிலோ ரூ.150-ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!

முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைகோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள், வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலை கூடிவிட்டது. கடலூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமணத்தில் மணகளுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாகக் கொடுத்து வாழத்திச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 'மொபைல்போன் வாங்கினால், 1 கிலோ வெங்காயம் இலவசம்' என, விற்பனை கடையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் வெங்காயத்தை, தங்க நகை போல் அணிந்து கொள்வது, வெங்காய வயலுக்கு இரவில் காவல் இருப்பது போன்ற மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணகுமார், 35. இவர் எட்டு ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தலையாரி தெருவில், மொபைல் போன் விற்பனை கடை நடத்தி வருகிறார்.இந்த கடையில், 'மொபைல் போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்' என விளம்பரம் செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து, சரவணக்குமார் கூறுகையில் இந்த விளம்பரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது, ஒரு நாளுக்கு மூன்று மொபைல்போன் விற்பனையான நிலையில் வெங்காயம் இலவசம் அறிவிப்புக்கு பின்பு எட்டு போன்கள் விற்பனையாகின்றன என்றார்..

மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!

மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மகி முக்கியமானது வெங்காயம் அந்த வெங்காயத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாது அபூர்வமான பொருளாகி விட்டது.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Shop Offers Free 1 kg Onions to Customers for Buying Smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X