Home
Mobile

நோக்கியா சி-7க்கு புதிய சிம்பையான் ஓஸ் அப்டேட்!

By Super
நோக்கியா சி-7க்கு புதிய சிம்பையான் ஓஸ் அப்டேட்!

பல சிறப்பான மொபைல்களை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளது நோக்கியா நிறுவனம். அந்த வகையில் 2010 ஆண்டு செப்டம்பர் சி-7 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையில் நோக்கியாவுக்கு முக்கிய இடத்தை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வரும் இந்த ஸ்மார்ட்போனுக்கு தனது அடுத்த வெர்ஷனான சிம்பையான் பெல்லி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ளும் வசதியை நோக்கியா வழங்குகிறது.

ஏற்கனவே, நோக்கியா-701 என்ற ஸ்மார்ட்போனில் இந்த சிம்பையான் பெல்லி வெர்ஸனை அப்டேட் செய்யும் வசதியை நோக்கியா வழங்கியது. இதைத்தொடர்ந்து, தற்போது சி-7 ஸ்மார்ட்போனுக்கும் சிம்பையான் பெல்லி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யும் வசதியை வழங்குகிறது.

இதன் மூலம் கூடுதல் வசதிகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா சி-7 ஸ்மார்மொபைல் ஏஆர்எம் பிராசஸர் கொண்டது. இந்த ஏஆர்எம் 11 பிராசஸர் 680 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க கூடியது. 130 கிராம் எடை கொண்ட இந்த மொபைலை மிக எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பிராட்காம் பிசிஎம் 2727 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரியையும், 256எம்பி சிஸ்டம் மெமரியையும் பெற முடியும். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் எக்ஸ்டர்னல் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவதற்கும் உதவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X