Home
Mobile

4ஜி அம்சத்துடன் ரூ.2,999/-க்கு அறிமுகமாகியுள்ள ஸ்வைப் நியோ பவர்.!

ஸ்மார்ட்போனின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஆட்டோ போகஸ்,எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

By Muthuraj

ஸ்வைப் டெக்னாலஜீஸ் இன்று அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் ஆன ஸ்வைப் நியோ பவர் சாதனத்தை ரூ.2,999/-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் வலைத்தளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, சாம்பல் மற்றும் தங்க நிற வகைகளில் வருகிறது.

4ஜி அம்சத்துடன் ரூ.2,999/-க்கு அறிமுகமாகியுள்ள ஸ்வைப் நியோ பவர்.!

ஸ்வைப் நியோ பவர் ஸ்மார்ட்போன் அனைத்து கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 4 அங்குல எச்டி எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) (800 x 480 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 512எம்பி ரேம் உடனான 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

4ஜி அம்சத்துடன் ரூ.2,999/-க்கு அறிமுகமாகியுள்ள ஸ்வைப் நியோ பவர்.!

இந்த ஸ்மார்ட்போன் சற்று பழைமையான ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயக்க முறைமையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கும் இக்கருவி 4ஜிபி அளவிலான உள் சேமிப்புடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஆட்டோ போகஸ்,எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

4ஜி அம்சத்துடன் ரூ.2,999/-க்கு அறிமுகமாகியுள்ள ஸ்வைப் நியோ பவர்.!

ஒரு 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் ஸ்வைப் நியோ பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6 மணி நேர பேச்சு நேரத்தை வழங்குவதாகவும், 200 மணி நேர காத்திருப்பு நேரத்தை வழங்குவதாகவும் நிறுவனம் கூறுகிறது. சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இரட்டை சிம், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத் 4.0 மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது. அளவீட்டில் 125 x 66 x 11 மிமீ மற்றும் 127 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Swipe Neo Power with 4G VoLTE and quad-core CPU lauched at Rs 2,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X