ரூ.4,399/-க்கு ஸ்வைப் கனெக்ட் ப்ரைம் (அம்சங்கள்).!

இது ரேம் 1ஜிபி உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயக்க முறைமையில் இயங்குகிறது.

|

ஸ்வைப் டெக்னாலஜீஸ் அதன் புதிய மலிவு ஸ்மார்ட்போன் ஆன ஸ்வைப் கனெக்ட் ப்ரைம் கருவியை ரூ.4,399/-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் வருகிறது மற்றும் ஸ்னாப்டீலில் வாங்குவதற்கு கிடைக்கும்.

ரூ.4,399/-க்கு ஸ்வைப் கனெக்ட் ப்ரைம் (அம்சங்கள்).!

ஸ்வைப் கனெக்ட் ப்ரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் 5 அங்குல எப்டபுள்யூவிஜிஏ (480 x 854பி) டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டிகே 6582எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ரேம் 1ஜிபி உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயக்க முறைமையில் இயங்குகிறது.

இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 64 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் வருகிறது. எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோ-ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்வைப் கனெக்ட் ஆனது ஒரு 2500எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, இது 11 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 100 மணி நேர காத்திருப்பு நேரம் வரை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த சாதனம் இரட்டை சிம், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், வைஃபை மற்றும் மைக்ரோயூஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்களை வழங்குகிறது. அளவீட்டில் கைபேசி 145.2 x 73 x 9.6 மிமீ மற்றும் 147 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Swipe Konnect Prime with 4G VoLTE and quad-core CPU available at Rs 4,399. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X