Home
Mobile

ஸ்வைப் கனெக்ட் கிராண்ட் வெறும் ரூ.2,799/-க்கு ஆண்ட்ராய்டு 6.0 உடன்.!

ரூ.3,000/-க்கும் குறைவான விலை கொண்ட இக்கருவி கொண்டுள்ள அம்சங்கள், இதன் விலையை நீங்கள் சரியாக தான் படித்தீர்களா என்று உங்களை பரிசோதிக்க வைக்கும்.

By Muthuraj

ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் சமீபத்திய சூப்பர் மலிவு ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்வைப் கனெக்ட் கிராண் கருவியின் விலை ரூ.2,799/- மட்டுமே, ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள், ரூ.2,799/- மட்டுமே.!

இதற்கே ஆச்சரியப்பட வேண்டாம். இக்கருவியின் அம்சங்களை முழுமையாக படித்து விட்டு மொத்தமாக ஆச்சரியப்பட்டுக்கொள்ளுங்கள். ஸ்வைப் கனெக்ட் கிராண்ட் கருவியானது ஒரு 5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

ரேம்

ரேம்

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது பல்பணி நிகழ்த்தும் வண்ணம் 1ஜிபி ரேம் உடன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 3ஜி ஆதரவு கொண்ட இக்கருவி இரட்டை சிம் இணைப்பும் கொண்டுள்ளது.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட 5எம்பி பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 2எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

8ஜிபி

8ஜிபி

ஸ்வைப் கனெக்ட் கிராண்ட் கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் அடிப்படையில் 3ஜி, கூடுதலாக வைஃபை 802.11 பி / ஜி /என், ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வழங்குகிறது.

பேட்டரி

பேட்டரி

இக்கருவியின் 2,500எம்ஏஎச் பேட்டரியானது ஒரு நாள் நீடிக்கும் போதுமான திறன் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்வைப் நிறுவனத்தின் படி இக்கருவி, 8-10 மணி பேச்சு நேரம் மற்றும்180 மணி நேர ஸ்டான்ட்-பை வழங்குகிறது.

சூப்பர் சாய்ஸ்

சூப்பர் சாய்ஸ்

இந்த ஸ்மார்ட்போன் ஆனது புதிய ஸ்மார்ட்போன் தளத்திற்கு மாற வேண்டும் ஆனால் அதிகமாக செலவழிக்க விரும்பவில்லை என்று என்னும் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சாய்ஸ் ஆகும். ரூ.3,000/-க்கும் குறைவான இக்கருவியின் விலை இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் நன்மையாக அமையும்.

சலுகை

சலுகை

இந்த ஸ்மார்ட்போன் ஷாப்க்ளூஸ் (ShopClues) வழியாக கிடைக்கும் மற்றும் நீங்கள் ஏர்டெல் மணி வேலட் பயன்படுத்த 10% சலுகையும் (அதாவது ரூ.200/-) பெற முடியும்.

கனெக்ட் 4ஜி

கனெக்ட் 4ஜி

கனெக்ட் கிராண்ட் தவிர, ஸ்வைப் நிறுவனம் இதே ரூ.2,799/- என்ற விலைக்கு கனெக்ட் 4ஜி ஸ்மார்ட்போன் கருவி ஒன்றையும் விற்கிறது. 4ஜி வோல்ட் இணைப்பு கொண்ட இக்கருவி ஒரு 4 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஒரு க்வாட்கோர் சிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் : ரூ.6,890/- முதல், என்னென்ன அம்சங்கள்.!?

Best Mobiles in India

English summary
Swipe Konnect Grand is a 3G phone with Android 6.0 at just Rs. 2,799. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X