அறிமுகம் : ரூ.3,999/-க்கு 5 இன்ச் கொண்ட ஸ்வைப் எலைட் 2 ப்ளஸ் (2017).!

Written By:

ஸ்வைப் அதன் ஸ்வைப் எலைட் 2 பிளஸ் (2017) வெளியீட்டுடன் அதன் ஸ்மார்ட்போன் போர்ட்டில் ஒரு புதிய உறுப்பினரை சேர்த்துள்ளது. ரூ.3,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்த சாதனம் ஸ்னாப்டீல் வலைத்தளத்தில் கருப்பு நிறத்தில் விற்பனைக்கு ஏற்கனவே கிடைக்கிறது.

ஸ்வைப் எலைட் 2 பிளஸ் (2017) அம்சங்களை பொறுத்தமட்டில், 5 இன்ச் விஜிஏ (480 x 640p) டிஸ்ப்ளே மற்றும் 1 ஜிபி ரேம் உடனான 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயக்க முறைமையில் இயங்குகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பின்புற கேமரா

பின்புற கேமரா

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள் சேமிப்புடன் வரும் இக்கருவி எல்இடி ஃப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ஸ்வைப் எலைட் 2 பிளஸ் (2017) ஆனது 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த சாதனம் இரட்டை சிம், 4 ஜி, ஜிபிஎஸ், வைஃபை, மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது. அளவீட்டில் 145.2 x 72.8 x 9.9 மிமீ மற்றும் 150 கிராம் எடையுள்ள இயக்கருவியின் முந்தைய மாறுபாடு (ஸ்வைப் எலைட் 2 பிளஸ்) கடந்த ஆண்டு ரூ.4,444/-க்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

 மேம்பட்ட ஒரு பதிப்பாகும்

மேம்பட்ட ஒரு பதிப்பாகும்

ஸ்வைப் எலைட் 2 பிளஸ் (2017) ஆனது ஸ்வைப் எலைட் 2 பிளஸின் மேம்பட்ட ஒரு பதிப்பாகும். கேமரா, பேட்டரி மற்றும் இயக்க முறைமை ஆகிய அம்சங்களை தவிர, ஏனைய அம்சங்கள் கடந்த ஆண்டு ஸ்வைப் எலைட் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் போன்றே தான் உள்ளது.

உள் சேமிப்பு

உள் சேமிப்பு

ஸ்வைப் எலைட் 2 பிளஸ் சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில், 854 x 480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் (எஸ்சி9830ஏ) செயலி உடனான 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்துள்ளது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவை வழங்கும் இக்கருவி பழைய ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 2500எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

சென்சார்

சென்சார்

செல்பீ மற்றும் வீடியோ அரட்டைகளுக்கான 2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4 ஜி / எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஒரு மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், ஜி சென்சார், ப்ராக்ஸிமிட்டி மற்றும் லைட் சென்சார் ஆகியவற்றையும் வழங்குகிறது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 143 x 72 x 9.8 மிமீ உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Swipe Elite 2 Plus (2017) with 5 inch display and quad-core CPU launched at Rs 3,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot