Subscribe to Gizbot

இது ஸ்மார்ட்போன் அல்ல, ஸ்வாக் போன் - அப்படி என்னதான் இருக்கு.?

Written By:
சமீப காலமாக ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான பொருட்களாகி விட்டன மற்றும் ரூ.15,000/-க்கு ஒரு நல்ல வடிவமைப்பு, மிருதுவான டிஸ்ப்ளே, ஒழுக்கமான ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் ஒரு நல்ல கேமரா கொண்ட கருவியை நம்மால் வாங்க முடியும். எனினும், நாம் கொடுக்கும் விலைக்கு நியாயமான கருவிதான் நம் கைகளுக்கு கிடைக்கிறது என்பதில் நம்மில் எத்தனை பேர் உறுதியாக இருக்கிறோம்.? - நிச்சயமாக அதுவொரு கடினமான பணி தான் - அந்த பணியை எளிதாக்குகிறது - ஹானர் 6எக்ஸ் கருவி.!

ரூ.15,000/- தான் உங்கள் பட்ஜெட் என்றால் இந்திய சந்தையில் கிடைக்கும் இந்த ஸ்வாக்போனை பற்றி மீம்கள் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பாதுகாப்பு, மென்பொருள் மற்றும் வன்பொருள் போன்ற முக்கியமான அம்சங்களில் எந்த சமரசம் இல்லாத ஹானர் 6எக்ஸ் சார்ந்த விரிவான தொகுப்பபே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிசைன்

டிசைன்

உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட ஹானர் 6எக்ஸ் கருவியானது ஒரு பட்ஜெட் கைபேசி மட்டுமில்லாது ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனும் கூட அந்த அளவிற்கு ஒரு இசைவான வடிவமைப்பை அளிக்கிறது. இந்த கைபேசி உங்கள் கைகளில் மிகவும் துணிவுமிக்க வகையில் பொருந்தும் மற்றும் அஉங்களின் அன்றாட பணிச்சூழலியல் மிகுந்த வாழ்க்கைக்கு பொருந்தும் வண்ணம் கையடக்க மற்றும் ஒற்றைக்கை பயன்பாடு வடிவமைப்பை பெற்றுள்ளது.

கேமிங்

கேமிங்

எந்த செயல்திறன் பிரச்சினைகளும் இல்லாமல் அனைத்து வகையான 3டிகேம்ஸ்களையும் நீங்கள் ஹானர் 6எக்ஸ் அக்கருவியில் விளையாடலாம். முக்கியமாக நீங்கள் விளையாட்டின் இடையில் எந்த பிரேம் ட்ராப் சிக்கலையும் அனுபவிக்க முடியாது மற்றும் இக்கருவியின் வன்பொருள், மென்பொருள் தேர்வுமுறை எந்த பேட்டரி வெப்ப நிகழ்வுகளையும் உண்டாக்காது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 6எக்ஸ் கருவியானது நீங்கள் படம் பார்கா மற்றும் கேம்ஸ் விளையாட ஏதுவாக 403 பிபிஐ பிக்சல் அடர்த்தி (பிக்சல் பர் இன்ச்) கொண்ட, 1080 x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

சிப், சேமிப்பு

சிப், சேமிப்பு

ஹானர் 6எக்ஸ் கருவியானது 2.1ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.7ஜிகாஹெர்ட்ஸ் உடனான நிறுவனத்தின் ஹூவாய் க்ரீன் 655 சிப் கொண்டு இயங்கும். ஸ்மார்ட்போனின் சேமிப்பு திறனை பொறுத்தமட்டில் 3ஜிபி ரென் உடனான 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் உடனான 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்ற இரண்டு மாறுபாடுகளை வழங்குகிறது. மற்றும் இரண்டு வகைகளிலுமே மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரையிலாக நீட்டிப்பு வசதியும் உள்ளது.

முதன்மை கேமரா

முதன்மை கேமரா

ஹானர் 6எக்ஸ் கருவியில் கேமரா ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும் இக்கருவி ஒரு 12எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு 2எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது அதாவது ஒரு இரட்டை பின்புற கேமரா கொண்டு வருகிறது. இக்கருவியின் எப் / 2.2 என ஒரு பரந்த துளை நீளம் மூலம் 1080 தர வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

உடன் ஹானர் 6எக்ஸ் ஒரு மதிப்பான செல்பீ கேமராவும் கொண்டுள்ளது அதாவது 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. உடன் இது அதிக தீர்மானம் மற்றும் அதிக தொனியிலான நிறங்கள் கொண்ட படங்களை கைப்பற்ற உங்களுக்கு உதவும்.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

ஹூவாய் ஹானர் 6எக்ஸ் கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி, எல்டிஇ ஆதரவு மற்றும் ஜி.பி.எஸ் ஆதரவும் வழங்குகிறது.

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

உடன் ஹானர் 6எக்ஸ் கருவி 0.3 நொடிகளில் திறக்கும் கைரேகை சென்சார் ஆதரவையும் வழங்குகிறது மற்றும் ஹானர் 6எக்ஸ் கருவியின் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனை திறக்க மட்டுமினி பல செயல்பாடுகளுக்கான இயக்க நிரல்படு அம்சமாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பிட முடியாத வண்ணம்

ஒப்பிட முடியாத வண்ணம்

அன்றாட நடைமுறைகளை எளிமையாக, செயல்திறன்மிக்க தன்மையோடு கையடக்கத்தில் வலனாகும் ஹானர் 6எக்ஸ் கருவியானது கடந்த இரண்டு வருடங்களில் வெளியான எந்தவொரு ஆண்ட்ராய்டு கருவியோடும் ஒப்பிட முடியாத வண்ணம் ஒரு ஸ்வாக் போனாக திகழ்கிறது. இந்த ஹானர் 6எக்ஸ் பிரத்தியேகமாக அமேசான்.இன் வலைத்தளத்தில் ஜனவரி 24, 2017 முதல் இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியாவுடன் மறைமுக மோதல் : ஐபோன் 8 காப்புரிமை லீக்ஸ்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Swag Phone Honor 6X is the most sought after Android smartphone. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot