விரைவில் : 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஆசஸ் சென்போன் 4.!
ஆசஸ் சென்போன்4 பின்புற ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவை.!
ஆசஸ் நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது ஆசஸ் சென்போன் 4 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு மென்பொருள் மாற்றங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

(1080-1920) வீடியோபிக்சல்:
இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அருமையான (1080-1920) வீடியோபிக்சல் இடம்பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

32ஜிபி மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 32ஜிபி மெமரிக் பொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:
ஆசஸ் சென்போன்4 பின்புற ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 12மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாப்ட்வேர்:
ஆசஸ் சென்போன் 4 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டு 7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
ஆசஸ் சென்போன் 4 பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications