வரவே வராதுனு சொன்ன Samsung போன்.. வெயிட்டா வந்து நிக்குது.. ரசிகர்களுக்கு செம்ம ஷாக்!
இந்த 2023 ஆம் ஆண்டும் சாம்சங்கின் (Samsung) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேல்ஸ்ஸி எஸ்23 சீரிஸ் (Galaxy S23 Series) அறிமுகமானதும், அதே சீரீஸின் கீழ் ஒரு எஃப்இ (FE) மாடல் அதாவது ஃபேன் எடிஷன் (Fan Edition) மாடல் அறிமுகமாகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை!
ஏனென்றால், கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸின் (Samsung Galaxy S22 Series) கீழ் கேலக்சி எஸ்22 எஃப்இ (Galaxy S22 FE) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவே இல்லை. ஆகையால், இந்த ஆண்டும் கூட கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனை யாருமே எதிர்பார்க்கவில்லை!

ஆனால் தற்போது அந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சாம்சங் தனது மனதை மாற்றிக்கொண்டது போல் தெரிகிறது. எஃப்இ மாடல்களின் அறிமுகம் டாப்-எண்ட் கேலக்ஸி ஏ-சீரிஸ் (Galaxy A Series) மாடல்களின் விற்பனையை பாதிக்கவில்லை என்கிற முடிவுக்கு சாம்சங் வந்துவிட்டது போல தெரிகிறது.
ஏனென்றால், ஒரு புதிய அறிக்கையின் வழியாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ 5ஜி (Samsung Galaxy S23 FE 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சாம்மொபைல் (SamMobile) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின் படி, இந்த ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் உலகளவில் அறிமுகமாகும்.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கேலக்ஸி எஸ்23 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையில் அறிமுகமாகி இருக்கும். இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது சாம்சங் எக்ஸிநோஸ் 2200 ப்ராசஸர் (Samsung Exynos 2200 SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் எஸ்23 எஃப்இ மாடலில் பெரிய மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். இந்த போன் 50எம்பி மெயின் கேமராவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது, இது வெண்ணிலா எஸ்22 (Galaxy S22) மற்றும் எஸ்23 (Galaxy S23) மாடல்களில் காணப்படும் அதே சென்சாராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மீதமுள்ள சென்சார்களை பொறுத்தவரை, இதில் 12எம்பி அல்ட்ரா-வைட் (Ultra Wide) கேமரா மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) கொண்ட 12எம்பி டெலிஃபோட்டோ கேமரா (Telephoto Camera) இடம்பெறலாம். மேலும் இதில் 8ஜிபி ஸ்டாண்டர்ட் ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி என்கிற 2 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை (Storage Options) எதிர்பார்க்கலாம்.
சாம்சங் எஸ்23 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 4500mAh பேட்டரி யூனிட்டை பேக் செய்யலாம். மேலும் அது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான (Fast Charging) ஆதரவையும் வழங்கலாம். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.60,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.57,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து சாம்சங் நிறுவனம் இன்னும் வாயே திறக்கவில்லை. எனவே நாம் மேற்கண்ட எல்லா தகவல்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளவும்; அதற்காக இந்தாண்டும் எஃப்இ மாடல் அறிமுகமாகாது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications