Home
Mobile

சர்ப்ரைஸ்.. OnePlus-ன் 3வது புது போன்.. 7500mAh பேட்டரி மினி போன்.. OnePlus 15, OnePlus 15R ஓரம்போ!

இந்தியாவில், ஒன்பிளஸ் ( OnePlus) நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலை அறிமுகப்படுத்தி 1 மாதம் தான் ஆகிறது. அதன் புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலை அறிமுகப்படுத்தி 2 நாட்கள் தான் ஆகிறது

இதற்கிடையில் மூன்றாவதாக, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த பிரீமியம் காம்பாக்ட் ஸ்மார்ட்போனையும் (Next premium compact smartphone) கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம்.

சர்ப்ரைஸ்.. OnePlus-ன் 3வது புது போன்.. 7500mAh பேட்டரி மினி போன்!

@kpgc10kai_ வழியாக கிடைத்துள்ள ஒரு புதிய எக்ஸ் தள பதிவின்படி, பிஐஎஸ் (BIS) என்கிற இந்திய தர நிர்ணய ஆணையத்தின் (Bureau of Indian Standards) வலைத்தளத்தில் ஒரு புதிய ஒன்பிளஸ் போன் காணப்பட்டுள்ளது. அது ஒன்பிளஸ் 15எஸ் என்று குறிப்பிட்ட டிப்ஸ்டர் நம்புகிறார்.

ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 6.31-இன்ச் BOE X3 OLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC)

- 50MP சோனி IMX906 ப்ரைமரி கேமரா (சில அறிக்கைகள் 200MP சாம்சங் HP5 சென்சாரை பரிந்துரைக்கின்றன)
- 50MP சாம்சங் JN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 7,500mAh பேட்டரி
- 100W அல்லது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15ஆர் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.47,999 என்றும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.52,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அறிமுக சலுகையின் கீழ் முறையே ரூ.3000 மற்றும் ரூ.5000 பேங்க் ஆபர் (ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.44,999 ஆகவும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.47,999 ஆகவும் குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சார்கோல் பிளாக் மற்றும் மின்ட் க்ரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஏஸ் எடிஷன் எலக்ட்ரிக் வயலட் கலரில் வாங்க கிடைக்கும். முன்பதிவு தொடங்கி விட்டது. விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஆரம்பம்.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD பிளஸ் அமோல்இடி டிஸ்பிளே
- குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா

- ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா
- 7400mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16
- IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.72,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Surprise 3rd New Phone OnePlus 15s Visits BIS Suggests India Launch Soon What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X