வியக்கவைக்கும் விலையில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் அறிமுகம்.!

மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்கள் 17மணி நேரம் வீடியோ பிளேபேக் ஆதரவு மற்றும் 10மணி நேரம் வெப்பிரவுசிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

|

மைக்ரோசாப்ட் நிறுவனம் 8-வது ஜென் இன்டெல் சிப்செட் வசதியுடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்கள் வரும் ஏப்ரல் 17-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது.

வியக்கவைக்கும் விலையில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் அறிமுகம்.!

குறிப்பாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்களின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் போன்ற பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப்:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப்:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல் பொதுவாக 13.5-இன்ச மற்றும் 15-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவருகிறது, பின்பு
டிஸ்பிளே டச் அம்சம் உள்ளதால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்கள்.

 சிப்செட்:

சிப்செட்:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 சாதனங்கள் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-8350யு சிபியு மற்றும் 3.6ஜிகாஹெர்ட்ஸ் டர்போ பூஸ்ட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் மல்டி-கோர் பிராசஸர் மற்றும் சிறந்த கிராபிக்ஸ் கார்டு
ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் கேமிங் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மெமரி:

மெமரி:

இந்த சாதனங்கள் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவருகிறது. மெமரிக்கு தகுந்தபடி இந்த லேப்டாப் மாடல்களின் விலை மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 லேப்டாப் மாடல்கள் 17மணி நேரம் வீடியோ பிளேபேக் ஆதரவு மற்றும் 10மணி நேரம் வெப் பிரவுசிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த லேப்டாப் மாடல்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.1,00,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Surface Book 2 with 8th Gen Intel quad-core processor is now official: Costs over Rs 1,00,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X