இன்ஃபினிட்டி எஸ்8 : முடிந்தால் இந்த சாம்சங் கருவியை கிண்டல் செய்து பாருங்கள்.!

By Prakash
|

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்திய மொபைல் சந்தையில் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்புகளை பெற்றள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் மிக அழகாக உள்ளது, வீடியோ மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் புதிய தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் இதன் வடிவமைப்பு பொருத்தமாட்டில் பல மக்கள் விரும்பும்வண்ணம் உள்ளது.

 சூப்பர் காம்பேக்ட் டிசைன் :

சூப்பர் காம்பேக்ட் டிசைன் :

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் 5.8 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் மிகச்சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் தன்மை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

மல்டிமீடியா :

மல்டிமீடியா :

கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போன் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் டச் போன்ற வசதியைப்பயன்படுத்தி விளையாட்டு மற்றும் வீடியோ போன்றவற்றை மிக அருமையாக பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிக தொழில்நுட்பதிறமைகளுடன் வெளிவருகிறது சாம்சாங் மொபைல் மாடல்கள்.

இன்ஃபினிட்டி டிஸ்பிளே:

இன்ஃபினிட்டி டிஸ்பிளே:

சாம்சங் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கேலக்ஸி எஸ் 8 மாடல் பொருத்தவரை இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே 'எச்ஆர்டி" பிரீமியம்' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தவகை மொபைல்போனில் எச்ஆர்டி உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யப் பயன்படுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் டிவி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

சினிமா அனுபவம்:

சினிமா அனுபவம்:

கேலக்ஸி எஸ் 8 டிஸ்பிளே பொருத்தமாட்டில் ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை தருகின்றது, 8.5:9 விகிதம், அதே காம்பாக்ட் ஃபார்ம் கார்டில் அதிக உள்ளடக்கத்தை கொண்டு வீடியோ காண உங்களை அனுமதிக்கிறது. மேலும் யூடியூப் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறது இந்த ஸ்மார்ட்போன்.

விண்டோஸ்:

விண்டோஸ்:

இந்த மொபைல் 'ஸ்னாப் விண்டோ' வசதியைப் பயன்படுத்துகிறது. இது ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்ய உங்களுக்கு உதவும். உங்களுக்கு தகுந்தபடி விண்டோஸ் மறுசீரமைக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும்.

3டி கேம்ஸ்:

3டி கேம்ஸ்:

இவற்றில் அமைந்துள்ள மிக முக்கியமான அம்சம் 3டி கேமஸ், இவை சிறந்த விளையாட்டு அனுபவத்தை தரும், மேலும் இதன் விடியோ (2960-1440)பிக்சல் பொருத்தமாட்டில் அருமையான திரைப்படங்கள் மற்றும் ஆன்லைன் வீடியோவை பார்க்க வசதியாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ8பிளஸ்:

கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ8பிளஸ்:

கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ8பிளஸ் பொருத்தவரை இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இவை தற்போது வந்த புது கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். மேலும் இந்த இரண்டு மாடல்களும் புரட்சிகரமான வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும் இவற்றில் சேமிப்புதிறன் மற்றும் பேட்டரி போன்றவற்றை மிகவும் பக்கபலமாக உள்ளது. இந்த வகை ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Why we are in love with the Galaxy S8 Infinity Display : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X