சூப்பர் சான்ஸ்! ரூ.79,900 மதிப்புள்ள ஆப்பிள் iPhone 14-ஐ ரூ.56,400 க்கு வாங்குவது எப்படி?

|

கடந்த செப்டம்பர் மாதம், ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களாக - ஐபோன் 14 சீரீஸ் (iPhone 14 Series) அறிமுகம் ஆகின. இதன் கீழ் மொத்தம் 3 ஐபோன் மாடல்கள் வாங்க கிடைக்கிறது: அவைகள் ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro), ஐபோன் ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஆகும்.

வழக்கமாக ஒரு ஸ்மார்ட்போன் சீரீஸ் அறிமுகமாகி சிறிது காலம் ஆனதுமே, அந்த சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் ப்ரோ மாடல்களை அப்படியே ஓரங்கட்டி விட்டு, வெண்ணிலா மாடலின் மீது மட்டுமே சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். ஆனால் ஐபோன் 14 சீரீஸில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ப்ரோ மாடல்களை வாங்கினார்கள்; அப்போதும் கூட ஐபோன் 14 மாடல் மீது எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை!

ரூ.79,900 மதிப்புள்ள iPhone 14-ஐ ரூ.56,400 க்கு வாங்குவது எப்படி?

நேற்று வரையிலாக - வெண்ணிலா ஐபோன் 14 மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இன்று, அந்த நிலை அப்படியே தலைகீழாய் மாறி உள்ளது. ஏனென்றால், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், ஐபோன் 14 மாடலானது "அதன் மிகக்குறைந்த விலையில்" விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.79,900 மதிப்புள்ள ஆப்பிள் iPhone 14-ஐ வெறும் ரூ.56,400 க்கு வாங்கும் வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது!

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், அமேசான் இந்தியா வழியாக கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்த வேண்டும். முதலில், ஐபோன் 14 மாடலின் மீது கிடைக்கும் விலைக்குறைப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்னரே குறிப்பிட்டபடி, ஐபோன் 14 மாடலின் அறிமுக விலை ரூ.79,900 ஆகும். ஆனால் தற்போது ரூ.77,900 க்கு அமேசான் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, நீங்கள் ஐபோன் 14 மீது கிடைக்கும் ரூ.5,000 என்கிற உடனடி தள்ளுபடியை (Instant discount) பெற வேண்டும். இதற்கு நீங்கள் எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்ட்டை (HDFC Bank Credit Card) பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த இரண்டாவது சலுகையையும் நீங்கள் பெறும் பட்சத்தில், ஐபோன் 14 மாடலின் விலை ரூ.72,900 ஆக குறைக்க முடியும். மூன்றாவது மற்றும் கடைசி சலுகை ஆனது - எக்ஸ்சேஞ்ச் ஆபர் (Exchange Offer) ஆகும்.

அமேசான் இந்தியா வலைதளமானது, ஐபோன் 14 மாடலின் மீது அதிகபட்சமாக ரூ.16,300 என்கிற எக்ஸ்சேஞ்ச் ஆபரை வழங்குகிறது. ஆக ப்ரைஸ் கட், பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் ஆகிய மூன்றையும் சரியாக பயன்படுத்தும் பட்சத்தின் கீழ், ஐபோன் 14 மாடலின் இறுதி விலை ரூ.56,600 ஆக மாறும். கடந்த நான்கு மாதங்களில், அதாவது ஐபோன் 14 அறிமுகமானதில் இருந்து இவ்வளவு குறைவான விலைக்கு இது விற்பனை செய்யப்பட்டதே இல்லை!

அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் அளவிலான சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது FHD+ ரெசல்யூஷன் உடன் வருகிறது. மேலும் இந்த டிஸ்பிளே, 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ஆப்பிளின் செராமிக் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷனையும் வழங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 12எம்பி மெயின் லென்ஸ் + 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

ஐபோன் 14 மாடலின் ரியர் கேமராவானது 60fps என்கிற வேகத்தின் கீழ் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 12MP செல்பீ கேமரா உள்ளது. மேலும் ஐபோன் 14 ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது iPhone 13-ல் இருக்கும் அதே சிப்செட் தான் ஆனால் இது கூடுதல் GPU கோர்-ஐ கொண்டுள்ளது, அதாவது 5-core GPU-வைக் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 6ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3279mAh அளவிலான பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் சமீபத்திய iOS 16 கொண்டு இயங்குகிறது. பயனர்களுக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தின் கீழ் ஐபோன் 14 மாடலில் ஃபேஸ் ஐடி-க்கான (Face ID) ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக, இதுவொரு டூயல் சிம் ஆதரவை வழங்கும் ஒரு 5ஜி போன் (5G Phone) ஆகும்!

Best Mobiles in India

English summary
Super Chance To Buy iPhone 14 For Rs 56600 Instead Of Its Original Price Rs 79900 in Amazon India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X