திடீரென ரூ.4000 க்கும்.. ரூ.5000 க்கும் விற்கப்படும் 12 Redmi போன்கள்.. இதோ முழு லிஸ்ட்!
ஆன்லைனில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில்.. திடீரென்று பல எண்ணிக்கையிலான ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போன்கள் ரூ,3,999 க்கும், ரூ.4,999 க்கும் பட்டியலிடப்பட்டு உள்ளன!
ஏன் இந்த திடீர் விலைக்குறைப்பு? சியோமியின் Mi.com-இல் என்ன நடக்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சைலன்ட் ஆக வேலையை பார்த்த சியோமி!
பல எண்ணிக்கையிலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் நம்ப முடியாத விலைகுறைப்பு சலுகைகள் (Price cut Offer) ஆனது சியோமி நிறுவனத்தின் 'ஸ்மார்ட்போன் க்ளியரன்ஸ் விற்பனை'யின் (Smartphone Clearance sale) ஒரு பகுதி ஆகும்!
இந்த சலுகையின் கீழ் கிட்டத்தட்ட 30 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் ஆனது "இலவசமாக கொடுக்கப்படாத குறையாக" மிக மிக மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது!

ரெட்மி நோட் 3 முதல் ரெட்மி நோட் 10 வரை..
சியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் க்ளியரன்ஸ் சேலின் கீழ் Redmi Note 3 போன்ற சற்றே பழைய மாடல்கள் முதல் சமீபத்தில் அறிமுகமான Redmi Note 10 வரையிலாக மொத்தம் 30 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது கற்பனைக்கு எட்டாத விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரெட்மி நோட் 10 சீரீஸ் மாடல்களை தவிர்த்து மற்ற எல்லா போன்களுமே எந்தவிதமான உத்தரவாதத்தையும், உதவியையும் பெறாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் இந்த போன்களை வாங்கலாம்?
ஒருவேளை நீங்கள் சற்றே பழைய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த விரும்பினால் அல்லது என்ட்ரி லெவல் மொபைல் போனில் இருந்து ஒரு ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேட் ஆக விரும்பினால்.. கீழ்வரும் 30 ரெட்மி போன்களில் ஏதேனும் ஒன்றை சொந்தமாக்கி கொள்ளலாம்!

முன் குறிப்பு
இந்த க்ளியரன்ஸ் சேலின் கீழ் வாங்க கிடைக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும்.
எனவே சில மாடல்கள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். இருப்பினும், Redmi 6A, Redmi Note 10 மற்றும் Redmi K சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது உடனடியாக வாங்க கிடைக்கின்றன.

ரூ.5,000 க்குள் வாங்க கிடைக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்
ரெட்மி 6A - ரூ.3,999
ரெட்மி 5A - ரூ.4,499
ரெட்மி 5 - ரூ.4,499
ரெட்மி 4 - ரூ.4,499
ரெட்மி 6 Pro 4,499
ரெட்மி 8A - ரூ.4,499
ரெட்மி 7A - 4,499
ரெட்மி 7 - ரூ.4,999
ரெட்மி நோட் 4 - ரூ.4,999
ரெட்மி நோட் 3 - ரூ.4,999
ரெட்மி Y2 - ரூ.4,999
ரெட்மி Y1 Lite - ரூ.4,999

ரூ.6,000 க்குள் வாங்க கிடைக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்
ரெட்மி 8A Dual - ரூ.5,499
ரெட்மி Y3 - ரூ.5,999
ரெட்மி 6 - ரூ.5,999
ரெட்மி நோட் 7 Pro - ரூ.5,999
ரெட்மி நோட் 7 - ரூ.5,999

ரூ.8,000 க்குள் வாங்க கிடைக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்
ரெட்மி நோட் 8 - ரூ.6,499
ரெட்மி நோட் 7S - ரூ.6,999
ரெட்மி 8 - ரூ.6,999
ரெட்மி நோட் 9 - ரூ.7,499
ரெட்மி நோட் 5 Pro - ரூ.7,999
ரெட்மி Y1 - ரூ.8,999

ரூ.10,000 க்கு மேல் வாங்க கிடைக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்
ரெட்மி நோட் 6 Pro - ரூ.10,999
ரெட்மி நோட் 10 - ரூ.10,999
ரெட்மி நோட் 9 Pro - ரூ.10,999
ரெட்மி நோட் 9 Pro Max - ரூ.11,999
ரெட்மி நோட் 8 Pro - ரூ.12,999
ரெட்மி K20 - ரூ.14,999
ரெட்மி K20 Pro - ரூ.17,999


Click it and Unblock the Notifications