கொஞ்சம் பொறுங்க.. செம ஸ்டைலான 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இறக்கிவிடும் Redmi.!
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி கே60 அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இந்த புதிய ரெட்மி கே60 அல்ட்ரா போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ரெட்மி கே60 அல்ட்ரா போனின் மாடல் எண் 23078RKD5C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு செவ்வக வடிவத்தில் மூன்று கேமரா மற்றும் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வளைந்த கர்வுட் டிஸ்பிளேவை கொண்டு இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ரெட்மி கே60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ரெட்மி கே60 அல்ட்ரா போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் 12-bit OLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,712 x 1,220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.
ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.
மேலும் VC liquid கூலிங் சிஸ்டம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். எனவே இந்த போனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும்சூடாகாது. ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்புரெட்மி கே50 அல்ட்ரா போனில் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, டூயல்-பேண்ட் ஜிஎன்எஸ்எஸ், என்எப்சி, ஐபி53 மதிப்பீடு, டால்பி அட்மாஸ்-ஆதரவு டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர்
வைப்ரேஷன் மோட்டார் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி கே50 அல்ட்ரா போன்.


Click it and Unblock the Notifications








