Home
Mobile

இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள்.!

5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்தியாவில் கிடைக்கும் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள்.!

ரெட்மி நோட் 10டி 5ஜி
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. குறிப்பாக 6.5-இன்ச் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இதுதவிர 48எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 15,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் 6.5-இன்ச் டிஸபிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸமார்ட்போன்.

குறிப்பாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி பின்புறம் 48எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர 16எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மீடியாடெக் Dimensity 800U சிப்செட் உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ15,999-ஆக உள்ளது. குறிப்பாக 6.5-இன்ச் டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக போக்கோ எம்3 ப்ரோ 5ஜி பின்புறம் 48எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

iQOO Z3 5G ஸ்மார்ட்போன்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட iQOO Z3 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990-ஆக உள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், ஸ்னாப்டிராகன் 768ஜி சிப்செட்
உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

iQOO Z3 5G சாதனத்தின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, 4400 எம்ஏஎச் பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ74 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Stunning 5G smartphones available at budget prices: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X