Home
Mobile

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலையை உருவாக்குங்கள்!

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

ஒப்போ ஏ சீரீஸ், ஸ்டைலுக்கும் பெர்ஃபாமென்ஸிற்கும் இடையே இணக்கமான சமநிலையைத் தரும் ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்காக நீண்ட காலமாகவே நன்கு அறியப்படும் ஒரு ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆகும், அதுவும் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலையில்! அப்படியான ஏ சீரீஸின் கீழ் ஒவ்வொரு முறையும் புதிய மாடலை சேர்க்கும் போது, ஒப்போ தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு பார்க்கிறது. ஒப்போவின் அந்த மரபு ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனில் துளியும் மாறவில்லை!

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

டிசைன்: நேர்த்தியும் தனித்துவமும் கலந்த கலவை!

ஒப்போ ஏ79 5ஜி ஆனது அதன் வசீகரிக்கும் வண்ணங்கள் மற்றும் புதிய க்ளோயிங் ஃபெதர் வடிவமைப்பு ஆகியவற்றுடன், பல வகையான ஸ்மார்ட்போன்களின் கூட்டத்திலிருந்து தனித்து வெளியே நிற்கிறது. இது இரண்டு நவநாகரீக கலர் ஆப்ஷன்களில் வெளியாகையுள்ளது: க்ளோயிங் க்ரீன் மற்றும் மிஸ்டரி பிளாக். இதன் பிரத்தியேகமான க்ளோயிங் ஃபெதர் வடிவமைப்பால் அலங்கரிக்கப்பட்ட க்ளோயிங் க்ரீன் வேரியண்ட் ஆனது இராகு போன்ற தோற்றத்துடன் ஒரு நேர்த்தியான வைரம் போன்ற தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. மறுகையில் உள்ள மிஸ்டரி பிளாக் ஒரு உன்னதமான, பளபளப்பான வடிவமைப்பை வழங்குகிறது, இது பிரீமியம் லுக்கையும் உறுதி செய்கிறது. ஏறக்குறைய 193 கிராம் எடையும், 7.99 மிமீ மெலிதான வடிவமைப்பையும் கொண்ட ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டைல் ​​மற்றும் இலகுரக வசதிக்கு இடையே சிறந்த சமநிலையை வழங்கி, மிகவும் வசதியான பிடிமானத்தையும் உறுதி செய்கிறது.

அதேசமயம் ஒப்போ ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பானது அழகியலை மட்டுமே கொண்டிருக்கவில்லை. மெக்கானிக்கல் வாட்ச்களில் இருந்து உத்வேகத்தை பெற்று, இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது ஒரு ஓவல் பேனல் டெக்கரேட்டிவ் பகுதிக்குள் பிரதிபலிக்கும் அமைப்புடன் ஒரு டயல் வடிவ வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த தனித்துவமான வடிவமைப்பானது டெப்த் மற்றும் வசீகரிக்கும் 3டி எஃபெக்ட்டை சேர்க்கிறது, வெவ்வேறு கோணங்களில் இருந்து ஒளி மற்றும் நிழலின் சிம்பொனியையும் உருவாக்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள தனித்துவமான ரெக்டாங்குலர் ஐலேண்ட் ஆனது கண்களை கவர்கிறது என்றே கூறலாம். குறிப்பாக கேமரா லென்ஸை சுற்றியுள்ள அந்த இரண்டு நேர்த்தியான ரிங்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு மெட்டல் டெக்ஸ்ஷரை கொடுக்க இதில் உறுதியான பாலிகார்பனேட் ஃபிரேம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவும் கூட இந்த ஸ்மார்ட்போனின் தனித்துவமான வடிவமைப்பு கூறுகளில் ஒன்றாகும்.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

டிஸ்பிளே : ஒரு விஷுவல் டிலைட்!

ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சன்லைட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இதில் குறிப்பிடத்தக்க 680 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளது. இது மிகவும் தீவிரமான மதிய வெயிலின் கீழும் தெளிவான காட்சிகளை உறுதி செய்கிறது. மேலும் இதில் 100% டிசிஐ-பி3 கலர் கேமட்க்கான ஹை ரெசல்யூஷன் மற்றும் ஆதரவானது, விதிவிலக்காசாச்சுரேஷன் மற்றும் துல்லியத்துடன் வண்ணங்களைகாட்சிப்படுகிறது. மேலும் துடிப்பான மற்றும் உயிரோட்டமான காட்சி அனுபவத்தையும் வழங்குகிறது.

கூடுதலாக, இதன் 6.72-இன்ச் டிஸ்பிளேவில் ஒரு டாப்-சென்டர் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பும் உள்ளது. இது ஒரு அதிவேக காட்சி அனுபவத்தை உறுதியளிக்கிறது. குறிப்பாக கேமிங், அல்லது இண்டர்நெட்டில் ப்ரவுஸிங் செய்யும் போது, எந்த ஒரு விவரத்தையும் தவறவிடாமல் இருப்பதை ஒப்போ ஏ79 5ஜி-யின் டிஸ்பிளே உறுதி செய்கிறது.

ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மட்டுமே உன்னதமான அனுபவத்தை வழங்குகிறதா என்று கேட்டால்.. இல்லவே இல்லை. இது ஆடியோ அனுபவத்தையும் வளப்படுத்துகிறது. வைட்வைன் எல்-1 சான்றிதழுடன், அமேசான் ப்ரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் இருந்து எச்டி கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதன் டூயல் பீக்கர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் ரிடெக்ஷன் மற்றும் எக்கோ-சப்ரஷன் அல்காரிதம்களுக்கு நன்றி, இதன் அதிவேக ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்டில் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் ஒப்போவின் ஆல்-டே ஏஐ ஐ கம்ஃபோர்ட் ஆனது தொடர்ச்சியான கண் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பார்வை அனுபவத்தை உறுதி செய்கிறது, அதே சமயம் இதன் அல்ட்ரா வால்யூம் மோட் ஆனது காணும் காட்சிகளின் தருணங்களுக்கு ஒலியை அதிகரிக்கிறது.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

பேட்டரி மற்றும் சார்ஜிங்: அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேட்டரி ஆயுள்!

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்தால் 448 மணி நேரம் ஸ்டேண்ட்பை டைம், 26 மணி நேரம் போன் கால்ஸ், 14 மணி நேர பப்ஜி கேமிங் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். இந்த இந்த சுவாரசியமான பேட்டரி ஆயுள் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் இருக்கிறது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

33 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் தனித்து நிற்கிறது. அதாவது நேரம் மிகவும்
முக்கியமான இந்த உலகில் இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் தனித்து நிற்கிறது. குறிப்பாக வெறும் 30 நிமிடங்களில் இதன் பேட்டரியை 51
சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். அதேசமயம் இதை 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 2.6 மணி நேரம் குறுஞ்செய்தி அல்லது சமூகவலைத்தளங்களைப்
பயன்படுத்த முடியும். குறிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுளை இந்த போன் வழங்குவதால் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

கேமரா: புகைப்பட கலைஞர்களுக்கு மகிழ்ச்சி!

புகைப்பட கலைஞர்கள் இந்த ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனின் பவர்ஃபுல் கேமரா அமைப்பைப் பாராட்டுவார்கள். இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதேபோல் ஏஐ போர்ட்ரெயிட் ரீடச்சிங் அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளன. இந்த போனின் உதவியுடன் பிரமிக்க வைக்கும் படங்களை எடுக்க முடியும். குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2எம்பி போர்ட்ரெயிட் கேமராவைக் பயன்படுத்தி மிகவும் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எச்டிஆர் ஆதரவு கொண்ட செல்பி கேமரா கொண்டுள்ளது. இந்த செல்பி கேமரா தெளிவான விவரங்களை உறுதி செய்கிறது.

குறிப்பாக ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ஏஐ மெயின் கேமரா ஆனது இயற்கைக்காட்சிகள், உருவப்படங்கள் அல்லது நெருக்கமான காட்சிகளைப் படம்பிடிக்க சிறந்து விளங்குகிறது. குறிப்பாக பல்வேறு சூழ்நிலைகளில் புகைப்படங்களை எடுக்க ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு இந்த போனில் உள்ள போர்ட்ரெயிட் மோட் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேசமயம் இது அழகான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. இந்த போனின் 8எம்பி செல்பிகேமரா மூலம் சவாலான லைட்டிங் இருக்கும் இடங்களில் கூட அருமையான மற்றும் தெளிவான விவரங்களுடன் படங்களை எடுக்க முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

பெர்ஃபார்மன்ஸ்: ஸ்மூத் மற்றும் ரெஸ்பான்சிவ்!

ஒப்போ ஏ79 5ஜி டிஸ்பிளேவில் மட்டும் சிறந்து விளங்கவில்லை, இது பெர்ஃபார்மன்ஸிலும் தாறுமாறாக சிறந்து விளங்குகிறது. இது 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மல்டிடாஸ்கிங் செயல்பாட்டை ஸ்மூத்தாக இயக்குகிறது. ரோபோவின் ரேம் எக்ஸ்பான்க்ஷன் அம்சம் தானாக பயன்படுத்தாத ஸ்டோரேஜ் இடத்தை ரேம் ஆக பயன்படுத்திக்கொள்கிறது. இதனால், பெர்பார்மன்ஸ் ஸ்பீட் அப் செய்யப்படுகிறது. ஒப்போ ஏ79 5ஜி சாதனம் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 5ஜி சிப்செட் உடன் வருகிறது.

இந்த சிப்செட் 7என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளத. இது ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட 5ஜி திறன்கனையும் ஆதரிக்கிறது. பாஸ்ட் டவுன்லோட் மற்றும் அப்லோட் உள்ளிட்ட 5ஜி இணைப்பின் பலன்களை நீங்கள் அனுபவிக்க இது அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 13-ல் இயங்குகிறது. இந்த மென்பொருள் பலவிதமான கஸ்டமைசேஷன் விருப்பங்கள் மற்றும் அம்சங்களைக் கொண்டு வருகிறது. இது பயனர் அனுபவத்தை உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்ற அனுமதிக்கிறது. இது ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

36-மாத ஃபிலுஎன்சி பாதுகாப்பு: லாங் லாஸ்டிங் பெர்பார்மன்ஸ்!

ஒப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் 36-மாத ஃபிலுஎன்சி பாதுகாப்பும் ஒன்றாகும். நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகும் மென்மையான மற்றும் பதிலளிக்கக்கூடிய அனுபவத்தை தொடர்ந்து வழங்குகிறது. 36 மாதங்களுக்குப் பிறகு இந்த போனின் வயதான விகிதம் 10% ஐ விடக் குறைவாக உள்ளது. இது புதிய ஸ்மார்ட்போனாக இருந்த அதே அளவிலான மென்மையை நீங்கள் அனுபவிப்பதை உறுதிசெய்கிறது. இந்த நீண்ட கால செயல்திறன் சாதனத்தின் ஆயுள் மற்றும் அதன் மென்பொருளின் மேம்படுத்தலுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கடுமையான சோதனை மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பு!

இந்த புதிய ஒப்போ ஏ79 5ஜி போன் ஆயுளில் நீடித்ததாகவும், பாதுகாப்பில் பலப்படுத்தப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய ஒப்போ கூடுதல் வேலைகளை செய்துள்ளது. இது டிராப் டெஸ்ட், ஸ்பிளாஷ் டெஸ்ட், ரேடியேஷன் டெஸ்ட், வெதர் டெஸ்ட், லைட் ஃபால் டெஸ்ட், மற்றும் சிக்னல் டெஸ்டிங் என்று ஆறு வெவ்வேறு வகையான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. கூடுதலாக, ஐந்து பாதுகாப்பு நிலைகளிலும் இந்த சாதனம் சோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, போனின் ஆயுள், ஃபையர் மற்றும் ஃபிளேம் ரெசிஸ்டன்ஸ், டெம்பரேச்சர் பாதுகாப்பு, நாய்ஸ் பாதுகாப்பு மற்றும் பேட்டரி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

50-க்கும் மேற்பட்ட உற்பத்தி தொடர்பான சோதனைகள், 130 நம்பகத்தன்மை சோதனைகள் மற்றும் 320 விரிவான சோதனை செயல்முறைகள் ஆகியவை ஃபோனின் நம்பகத்தன்மை மற்றும் நீடித்த தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒப்போ ஏ79 5ஜி ஆனது அன்றாட பயன்பாட்டின் கடுமைகளைத் தாங்கி அதன் சிறந்த செயலைத் தொடரும் வகையில் மிகவும் உறுதியான போனாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

எங்களது இறுதி முடிவு!

ஓப்போ ஏ79 5ஜி போனானது, பர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்டைலை சரியாக சமன் செய்கிறது. இதுவொரு நேர்த்தியான வடிவமைப்பு, விதிவிலக்கான டிஸ்பிளே, ஈர்க்கக்கூடிய பேட்டரி லைஃப் மற்றும் பவல்ஃபுல் கேமரா சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் ஸ்மூத் பர்ஃபாமென்ஸ், 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் லாங்-லாஸ்டிங் ஃப்ளூயன்சி புரெடெக்சன் ஆகியவை பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் வலுவான போட்டியாளரை உருவாக்குகிறது.

உண்மையில், ஏ79 5ஜியை வேறுபடுத்துவது, அதன் ஸ்டைலையும் சப்ஸ்டன்ஸையும் தடையின்றி ஒருங்கிணைக்கும் திறனேயாகும். க்ளோயிங் கிரீன் மற்றும் மிஸ்டரி பிளாக் கலர் ஆப்சன்களில், யுனிக் க்ளோயிங் ஃபெதர் டிசைனானது, எலிகன்ஸ் டச் அனுபவத்தை வழங்குகிறது. இடையில், 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் ஃபாஸ்ட் சார்ஜிங், நீங்கள் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும்.

நீங்கள் புகைப்படக்கலை ஆர்வலராக இருந்தாலும், பல்பணி செய்பவராக இருந்தாலும், லாங்-லாஸ்டிங் பர்ஃபாமென்ஸை மதிக்கும் ஒருவராக இருந்தாலும், ஓப்போ ஏ79 5ஜி போனானது, அனைத்து முன்னிலையையும் வழங்குகிறது. அதன் 5ஜி கனெக்டிவிட்டியானது, நெட்வொர்க் வேகத்தின் அடிப்படையில், நீங்கள் எதிர்கால-சான்றுடன் இருப்பதை உறுதிசெய்கிறது. மேலும், மென்பொருள் மேம்படுத்தல் மற்றும் லாங்-டெர்ம் ஃப்ளூயன்சி பாதுகாப்பு ஆகியவை இந்த டிவைஸை நீண்ட பயன்பாட்டிற்குப் பிறகும் தொடர்ந்து ஈர்க்க வைத்திருக்கும்.

மேலும், கடுமையான சோதனை, சேஃப்டி புரெடெக்சன் ஆகியவை மீதான ஓப்போவின் அர்பணிப்பை, அன்றாட வாழ்வின் சவால்களை தவறவிடாமல், ஏ79 5ஜியை கையாளுவதன் மூலம் நம்பலாம். நீங்கள் பயணத்தில் இருந்தாலும் அல்லது மல்டிமீடியா கன்டென்ட்டை அனுபவித்தாலும், உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த டிவைஸ் நன்கு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

ஓப்போ ஏ79 5ஜியின் விலை இந்திய ரூபாயில் ரூ.19,999 ஆகும் மற்றும் பிளிப்கார்ட், அமேசான், ஓப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் அவுட்லெட்களில் கிடைக்கிறது.

நீங்கள் ஸ்டைல் மற்றும் சப்ஸ்டன்ஸ் கொண்ட டிவைஸை தேடிக்கொண்டிருந்தால், ஓப்போ ஏ79 5ஜி போனானது, சிறந்த தேர்வாகும். இது ஏஸ்தெடிக் மற்றும் பர்ஃபாமென்ஸ் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்யும் ஒரு ஸ்மார்ட்போனாகும். இன்றைய போட்டி சந்தையில் கிடைப்பதற்கு கடினமான, உண்மை மற்றும் முழுமை கொண்ட பிரீமியம் அனுபவத்தை இது வழங்குகிறது. ஆகவே, நீங்கள் மார்கெட்டில் புதிய போனுக்காக காத்திருந்தால், ஹார்மனியில் பர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்டைல் கொண்டுள்ள ஓப்போ ஏ79 5ஜியை பாருங்கள்.

ஒப்போ ஏ79 5ஜி: செயல்திறன் மற்றும் ஸ்டைலுக்கு இடையே சரியான சமநிலை!

பண்டிகை விற்பனை சலுகைகள் மற்றும் சேவை சலுகைகள்!

ஓப்போவானது, தீபாவளி சீசனுக்கு ஏற்றவாறு, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் மீது சிறப்பான தள்ளுபடிகள் மற்றும் விளம்பரங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு, ஏயு ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஒன் கார்டு ஆகியவை மூலம் மெயின்லைன் ரீடெயில் அவுட்லெட்கள் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில் 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் ரூ.4,000 வரையில் கேஷ்பேக் பெறலாம்.

கூடுதலாக, பஜாஜ் ஃபின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், ஹோம் கிரெடிட், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் மஹிந்திரா ஃபைனான்ஸ் போன்ற முன்னணி நிதியாளர்களிடமிருந்து ஜீரோ டவுன் பேமென்ட் திட்டங்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். விசுவாசமான ஓப்போ வாடிக்கையாளர்கள், ரூ.4,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். அதோடு ஓப்போ எக்ஸ்க்ளூசிவ்வின், ஒரு பகுதியாக, எந்தவொரு ஓப்போ டிவைஸையும் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் ரூபாய் வரையிலான ரொக்கப் பரிசு மற்றும் இதர உறுதியான பரிசுகளை வெல்வார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Strike Perfect Balance Between Performance Style With OPPO A79 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X