இந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க! இல்லைனா சிக்கல் தான்!

|

நாங்கள் கூறப்போகும் விஷயம் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, குறிப்பாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில தவறான சார்ஜிங் பழக்கங்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய மின்சார கட்டணத்தை அதிகரிக்கக் கூடும். நீங்கள் தெரியாமல் செய்யும் 10 சார்ஜிங் பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.

உடனே நீங்கள் செய்யும் இந்த தவறுகளைத் நிறுத்துங்கள்

உடனே நீங்கள் செய்யும் இந்த தவறுகளைத் நிறுத்துங்கள்

இந்த 10 தவறுகளை நீங்கள் திருத்திக்கொண்டாள், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுட்காலம் காப்பாற்றப்படும். அதேபோல், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி பற்றிய புரிதலையும் உங்களுக்கு இந்த பதிவு தெளிவாக எடுத்துரைக்கக்கூடியது. குறிப்பாக நாம் இன்று பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பேட்டரிகள் துல்லியமான எண்ணிக்கையிலான சார்ஜ் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டவை, ஆகையால் இந்த தவறுகளைத் உடனே தவிர்ப்பது என்பது மிகவும் நல்லது.

100% நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா?

100% நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா?

இந்த தவறுகளில் பொதுவாக நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்ன தெரியுமா? நம்முடைய ஸ்மார்ட்போன் சாதனத்தை எப்பொழுதும் நீண்ட காலம் நீடிக்கும் வகையில், அவற்றை 100% வரை சார்ஜ் செய்வது தான். உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் 100% சார்ஜ் செய்பவர் என்றால் உங்களுடைய பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. இதற்கான காரணம் என்ன என்பதை இறுதியில் சொல்கிறோம், முதலில் நாம் திருத்திக்கொள்ள வேண்டிய 10 சார்ஜிங் தவறுகளைப் பார்க்கலாம்.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

1. பவர் சாக்கெட்டில் சார்ஜ்ர்

1. பவர் சாக்கெட்டில் சார்ஜ்ர்

உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜிங் செய்யப்படவில்லை என்றாலும் கூட சிலர் சார்ஜரை அப்படியே சாக்கெட்டில் விட்டுவிடுவார்கள், இது தான் நீங்கள் செய்யும் பெரிய தவறு. இந்த பழக்கம், சாக்கெட்டில் இருக்கும் சார்ஜரை தொடர்ந்து சக்தியை ஈர்க்கச் செய்கிறது. இது உங்கள் மின்சார கட்டணங்களுக்கு நல்லதல்ல. கூடுதலாக, மின்சாரத்தை ஈர்ப்பதனால் வெப்பம் வெளியாகிறது, இந்த வெப்பம் மெதுவாகக் குவிந்து அருகிலுள்ள எதையாவது தீ பிடிக்கக் காரணமாகிறது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

2. இரவு முழுதும் சார்ஜிங் செய்யும் பழக்கம்

2. இரவு முழுதும் சார்ஜிங் செய்யும் பழக்கம்

உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்ய விட்டுவிட்டால், நீங்கள் மின்சாரத்தை வீணாக்குவீர்கள். அதேபோல், தேவையான அளவைவிட உங்களுடைய பேட்டரி அதிக சார்ஜ்ஜை உறிஞ்சும், இது பேட்டரியின் சார்ஜிங் சுழற்சிகளைக் கெடுத்துவிடும், இதனால் பேட்டரி ஆயுள் குறைந்துவிடும். ஒரே இரவில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது பேட்டரியில் அதிக வெப்பத்தை உருவாக்கும் என்பதை மறக்காதீர்கள்.

3. சார்ஜிங்கில் இருக்கும்பொழுது போனை பயன்படுத்தும் பழக்கம்

3. சார்ஜிங்கில் இருக்கும்பொழுது போனை பயன்படுத்தும் பழக்கம்

இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம் இதுதான், அதேபோல் நம்மில் பலர் செய்யக்கூடிய பொதுவான தவறும் இது தான். உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்யும் அதே நேரத்தில் அதை நீங்கள் பயன்படுத்தினால் மற்றொரு புறம் பேட்டரியின் சார்ஜ் ட்ரைன் அவுட் ஆகிறது. இதனால் ஒரே நேரத்தில் பேட்டரி இரண்டு வேலைகளைச் செய்கிறது, இது பேட்டரியை ஓவர் ஸ்ட்ரெஸ் ஆக்குகிறது. அதிகளவிலான ஸ்மார்ட்போன் விபத்துக்கள் இதனால் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4. 20% மேல் இருக்கும்போது கூட சார்ஜ் செய்யும் பழக்கம்

4. 20% மேல் இருக்கும்போது கூட சார்ஜ் செய்யும் பழக்கம்

உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து சார்ஜ் செய்வது தவறானது, ஏனென்றால் இது பேட்டரியின் ஆயுளைக் குறைத்துவிடும். பேட்டரியைப் சரியான வழியில் பராமரிப்பதற்கான சிறந்த வழி, உண்மையிலேயே சார்ஜ் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும். சரியாகச் சொன்னால் 20% க்கு கீழ் இருக்கும்போது சார்ஜ் செய்வது நல்லது, ஆனால் 5% க்கு குறைவாக இருக்கும்போது சார்ஜ் செய்வது நல்லதல்ல.

SHAREit மற்றும் Xender பயனர்களே கவலை வேண்டாம்! உங்களுக்கான சிறந்த மாற்று சாய்ஸ் இதுதான்!

5. 0% சார்ஜ் வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம்

5. 0% சார்ஜ் வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பழக்கம்

உங்கள் ஸ்மார்ட்போனை எப்பொழுதும் 0% என்ற அளவை எட்டவிடாதீர்கள், இது உங்களுடைய பேட்டரிக்கு மிகவும் மோசமானது. சார்ஜ் இல்லாமல் உங்களுடைய போன் இறந்தபின்பு நீங்கள் சார்ஜ் செய்தால், உங்களுடைய பேட்டரியின் சார்ஜிங் சுழற்சி பாதிக்கப்படுகிறது. நம்முடைய போனில் உள்ள லித்தியம் பேட்டரிகள் சார்ஜ் சுழற்சிகளின் கீழ் இயங்குகிறது, இதனால் வழக்கத்தை விட மிகவும் வேகமாக உங்களுடைய பேட்டரி ஆயுள் வீணாகிவிடும்.

6. 100% சார்ஜ் செய்யும் மோசமான பழக்கம்

6. 100% சார்ஜ் செய்யும் மோசமான பழக்கம்

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100% வரை சார்ஜ் செய்தால், அதன் ஆயுட்காலம் குறைந்துவிடும். ஏனென்றால், ஒவ்வொரு பேட்டரியிலும் துல்லியமான சார்ஜிங் சுழற்சிகள் உள்ளது, நீங்கள் எப்போதும் 100% க்கு சார்ஜ் செய்தால், இந்த சுழற்சிகள் விரைவில் முடிவடைந்துவிடும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் பேட்டரியை 100% க்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். பொதுவாக எப்பொழுதும் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்வது நல்லது.

7. மொபைல் கேஸ் உடன் சார்ஜ் செய்யும் பழக்கம்

7. மொபைல் கேஸ் உடன் சார்ஜ் செய்யும் பழக்கம்

பேட்டரிகளின் முக்கிய எதிரிகளில் ஒன்று 'வெப்பம்', உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் மொபைல் கேஸ் உடன் சார்ஜ் செய்வதன் மூலம், உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தை நீங்கள் போனுடன் சிக்க வைக்கிறீர்கள். இது ஸ்மார்ட்போனின் பேட்டரி மட்டுமின்றி பிற உள் கூறுகளையும் வெப்பமாக்கும். இதனால் ஒட்டுமொத்த போனிற்கும் ஆபத்து நேரக்கூடும். உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு முன் மொபைல் கேஸை கழட்டிவிட்டு, பேட்டரியை "சுவாசிக்க"விடுங்கள்.

இது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்!

8. வேறு போனின் சார்ஜ்ர் அல்லது விலை மலிவான சார்ஜ்ர் பயன்படுத்தும் பழக்கம்

8. வேறு போனின் சார்ஜ்ர் அல்லது விலை மலிவான சார்ஜ்ர் பயன்படுத்தும் பழக்கம்

உங்கள் ஸ்மார்ட்போனிற்கு சொந்தமான இணக்கமான சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள், வேறொரு பிராண்டில் அல்லது மற்றொரு மாடலுக்குரிய சார்ஜரைப் பயன்படுத்தாதீர்கள், சரியான சார்ஜரை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் பேட்டரிக்கு அனுப்பப்படும் மின்சாரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இது அதிக வெப்பமடைவதற்கும் மற்றும் ஸ்லொவ் சார்ஜிங்கிற்கும் வழிவகுக்கும். போனுடன் வரும் சார்ஜரை பயன்படுத்துங்கள், ஒருவேளை தொலைந்துவிட்டால் அதே மாடலை ஆர்டர் செய்து வாங்குங்கள்.

9. போலியான அறியப்படாத பேட்டரி பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பழக்கம்

9. போலியான அறியப்படாத பேட்டரி பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பழக்கம்

உங்கள் பேட்டரியின் செயல்திறனைக் கண்காணிக்க இலவச பயன்பாடுகள் உதவியாக இருக்கும், ஆனால் நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அறியப்படாத மூலங்களால் உருவாக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் மதிப்பிடப்படாத பயன்பாடுகள் உங்கள் பேட்டரியை அழுத்தத்திற்கு உள்ளாக்கும். பயன்பாட்டின் ஆதாரம் மற்றும் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்க வேண்டும்.

10. லேப்டாப் மூலம் சார்ஜ் செய்யும் பழக்கம்

10. லேப்டாப் மூலம் சார்ஜ் செய்யும் பழக்கம்

உங்கள் ஸ்மார்ட்போனை அடிக்கடி லேப்டாப்பில் சார்ஜ் செய்யும் பழக்கம் உள்ளது என்றால் இதை நிச்சயம் கவனித்து இருப்பீர்கள், வழக்கமான சாக்கெட்டுகளைப் பயன்படுத்துவதை விட லேப்டாப்பில் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும், மேலும் இது பேட்டரியின் ஃபாஸ்ட் சார்ஜ் விருப்பத்தைச் செயல்படுத்தாது. இது பெரிய தீங்கு இல்லை என்றாலும் கூட நேரம் வீணாகும். நீங்கள் விரைவாகவும் சிறந்த வழியில் சார்ஜ் செய்ய விரும்பினால், எப்போதும் போல பவர் சாக்கெட்டைப் பயன்படுத்துங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Stop This 10 Charging Mistakes Immediately That You Are Making Right Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X