ரூ.9,999 முதல் அட்டகாச ரியல்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம்!

|

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ மற்றும் ரியல்மி 5 எஸ் ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ இரண்டு வகைகளில் வெளியிடப்படுகிறது. 128 ஜிபி சேமிப்பு வசதி 8 ஜிபி ரேம் பவர் மற்றும் 25 ஜிபி சேமிப்பு வசதி 8 ஜிபி ரேம் பவருடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ .29,999 மற்றும் ரூ .33,999 ஆக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுக சலுகையாக இந்த தொலைபேசியுடன் ஒஸ்மோ மொபைல் 3 வழங்கப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 2 இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விலை ரூ.34,999-க்கு கிடைக்கும் போன்கள்

விலை ரூ.34,999-க்கு கிடைக்கும் போன்கள்

இந்த மொபைல் போனானது புகழ்பெற்ற ஜப்பானிய வடிவமைப்பாளரான நாவோடோ புகாசாவா உருவாக்கியது. இது ரெட் பிரிக்ஸ் மற்றும் கான்கிரீட் வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த போனின் விலை ரூ. 34,999 ஆகும். இந்த போன் கிறிஸ்துமஸ் தினத்தன்று விற்பனைக்கு வருகிறது.

ஒஸ்மோ மொபைல் 3 வசதிகள்:

ஒஸ்மோ மொபைல் 3 வசதிகள்:

ஒஸ்மோ மொபைல் 3 சிறியதாக இருந்தாலும், இது 15 டிகிரி கோணத்தில் இருக்கிறது. இது நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாக மடிக்கும் வசதியுடன் உள்ளது.

ஒஸ்மோ மொபைல் 3 பயன்பாடுகள்:

ஒஸ்மோ மொபைல் 3 பயன்பாடுகள்:

டிஜிட்டர் ஜூம், ஃபோகஸ், ஃபேஸ் டிராக்கிங் மற்றும் கேமரா செட் செய்தல் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் புளூடூத் 5.0 மற்றும் டி.ஜே.ஐ மிமோ பயன்படுத்தி மொபைல் போனுடன் இதை இணைக்க முடியும். இது 2,450 எம்.ஏ.ஹெச் பேட்டரி வசதியுடன் வருகிறது. சுமார் 15 மணி நேரம் நீடிக்கும் எனவும் டைப்-சி போர்ட் மூலம் சார்ஜ் போட்டுக்கொள்ள முடியும்.

ரூ.9,999-க்கு கிடைக்கும் மொபைல்:

ரூ.9,999-க்கு கிடைக்கும் மொபைல்:

ரியல்மி 5 எஸ் இரண்டு வகைகளில் வருகிறது. ரூ.9,999-க்கு 64 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் ரூ.10,999-க்கு 128 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.

நவம்பர் 26 ஆம் தேதி விற்பனை

நவம்பர் 26 ஆம் தேதி விற்பனை

நவம்பர் 26 ஆம் தேதி முதல் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் ஆகியவற்றின் முதற்கட்ட விற்பனை நடைபெறும். ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ நெப்டியூன் ப்ளூ மற்றும் லூனார் வைட் வண்ணங்களில் வருகிறது. வெளியீட்டு சலுகையாக, 6 மாத தவணைகளுக்கு முன்பணம் இல்லாத இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது.

நவம்பர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் மொபைல்

நவம்பர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் மொபைல்

ரியல்மி 5 வகை போன்கள் நவம்பர் 29 முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் விற்பனைக்கு வருகிறது. வெளியீட்டு சலுகைகளில் முன்பணம் இல்லாத இஎம்ஐ-க்கள் வசதி. இந்த போனானது கிரிஸ்டல் ரெட், கிரிஸ்டல் ப்ளூ மற்றும் கிரிஸ்டல் பர்பில் வண்ணங்களில் வருகிறது.

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ:

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ:

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ 6.5 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி, 2.5 டி வளைந்த கண்ணாடி காட்சி கொண்டுள்ளது. இந்த போனில் 91.7% ஸ்கிரீன்-டு-பாடி, எச்டிஆர் 10 +, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் 135 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம் உள்ளது.

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ சலுகைகள்

ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ சலுகைகள்

4000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் 50W (10W / 5A) ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. அதோடு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு உள்ளது. 13 மெகாபிக்சலின் டெலிஃபோட்டோ லென்ஸ், 20 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியும் உள்ளது.

ரியல்மே 5 எஸ் போன்கள்:

ரியல்மே 5 எஸ் போன்கள்:

ரியல்மே 5 எஸ் 6.51 இன்ச் எச்டி + (1600 x 720 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் கொண்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. இந்த மொபைல் போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

ரியல்மி 5 மொபைல் சலுகைகள்

ரியல்மி 5 மொபைல் சலுகைகள்

வைர வடிவத்தில் குவாட் ரியர் கேமரா பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, எல்இடி ஃபிளாஷ். அதேபோல் இந்த மொபைல் போனில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் 5,000 எம்ஏஎச் பேட்டரி வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

Pic: Social media

Best Mobiles in India

Read more about:
English summary
Realme has today launched the Realme X2 Pro and Realme 5s smartphones in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X