கேமர்களை வாய்பிளக்க வைக்கும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிஷன்.!

Written By:

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி - திரைப்படமானது வருகிற டிசம்பர் 15-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை மனதிற்கொண்டு ஒன்ப்ளஸ் மற்றும் டிஸ்னி நிறுவனம் இணைந்து, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பதிப்பானது திரைப்படம் வெளியாகும் ஒருநாள் முன்னர், அதாவது 14 டிசம்பர் என்று மும்பையில் வெளியிடப்படவுள்ளது.

கேமர்களை வாய்பிளக்க வைக்கும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிஷன்.!

இந்த லிமிடெட் பதிப்பு மீதான ஆர்வம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலைப்பாட்டில், "கேலக்ஸியை ஆளுவதற்கு இது போதுமானது" என்ற வாசகத்துடன் இந்த பதிப்பு வெளியாகிறது. ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பில், எந்த விதமான இடையூறும் இல்லாமல் நீங்கள் விளையாடக்கூடிய பல ஸ்டார் வார்ஸ் கேம்ஸ் உள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறுக்கீடுகள் இல்லாத கேமிங்கை அனுபவிக்க உதவும்

குறுக்கீடுகள் இல்லாத கேமிங்கை அனுபவிக்க உதவும்

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் இருந்து அதிகபப்டியான மேம்படுத்துதலுக்கு உள்ளாகியுள்ள ஒன்ப்ளஸ் 5டி ஆனது அதன் அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தினை ஸ்டார் வார்ஸ் பதிப்பிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கைபேசியின் இடது விளிம்பில் காட்சிப்படும் இதன் அலெர்ட் ஸ்லைடர் அம்சமாநாட்டு சந்தையில் கிடைக்கக்கூடிய மற்ற சாதனங்களிலிருந்து வெளியே நிற்கும் ஒரு தனித்துவமான அம்சமாகும். ஸ்லைடரின் இயல்புநிலை நிலைகளானது - ரிங், டூ நாட் டிஸ்டர்ப் மற்றும் சைலண்ட் ஆகியவைகளாகும்.

டூ-நாட்-டிஸ்டர்ப் (DND) பயன்முறை

டூ-நாட்-டிஸ்டர்ப் (DND) பயன்முறை

ஆக இங்கேதும் விளையாட்டு ஆர்வலர்கள் இருந்தால், அவர்கள் கேம்ஸ்களை விளையாடும் போது, அலெர்ட் ஸ்லைடரின் டூ-நாட்-டிஸ்டர்ப் (DND) பயன்முறையை தனிப்பயனாக (டீபால்ட்) ஆக்கலாம். இந்த ஸ்டார் வார்ஸ் பதிபின் தோற்றம் மற்றும் கருப்பொருளானது சுவாரஸ்யமான கேமிங் அனுபவத்தை வழங்குவது தான் என்பதால் இந்த டிஎன்டி பயன்முறையானது, பயனர்களுக்கு ஒரு சரியான மற்றும் தடையற்ற கேமிங் அனுபவத்தை அனுபவிக்க உதவும். இந்த ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் சிறப்பு பதிப்பு மாதிரியில் ஸ்டார் வார்ஸ் விளையாடுவதற்கு முன், பயனர்கள், செட்டிமாக்ஸ் > அட்வான்ஸ்டு சென்று கேமிங் டூ நாட் டிஸ்டர்ப் மீது தட்டவும். இது கேமிங்கின் போது அறிவிப்புகளை அனுப்பாமல் இருக்க செய்யும்.

டிஎன்டி பயன்முறையின் கீழ் வரும் ஸ்டார் வார்ஸ் கேம்ஸ்

டிஎன்டி பயன்முறையின் கீழ் வரும் ஸ்டார் வார்ஸ் கேம்ஸ்

நைட்ஸ் ஆப் ஓல்ட் ரிபப்ளிக்: இந்த கேமில் வீரர்கள் விண்மீன்களை ஆராய முடியும், பண்டைய இரகசியங்களை கண்டறிய முடியும் மற்றும் ஏன் சாண்ட்பீப்பிள் வெளிபிரதேசகாரர்களை வெறுக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். இந்த க்ளெமில் சில கவர்ச்சிகரமான மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்களை காண்பீர்கள். மேலும் வீரர்கள் தங்கள் பின்னணியை கூட கண்டுபிடிக்க முடியும். நைட்ஸ் ஆப் ஓல்ட் ரிபப்ளிக் கேம் ஆனது நிச்சயமாக ஒரு ஸ்டார் வார்ஸ் வெறியர்களுக்கான ஒரு வெளிப்படையான கேம் ஆகும்.

ஸ்டார் வார்ஸ் ராவ்க் லீடர் - ராவ்க் ஸ்கோர்டான் 2: இந்த கேம் ஆனது ஸ்டார் வார்ஸ் பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு ஷிப்களில் வீரர்களை இறக்கி விடும். கிளாஸ் சிட்டி ஆஃப் பெஸ்பின் மற்றும் ஹிட்டன் இம்பீரியல் தளங்கள் போன்ற கிளாசிக் இடங்களின் மீதான ஈடுபாடு பலருக்கும் அதிகம்.

ஸ்டார் வார்ஸ் பேட்டில் ஃப்ராண்ட்:

ஸ்டார் வார்ஸ் பேட்டில் ஃப்ராண்ட்:

இந்த ஸ்டார் வார்ஸ் கேம் ஆனது விளையாடும் வீரர்களை போர்களில் பங்கு எடுத்துக்கொள்ளும் ஒரு உணர்வை வழங்க கூடியது. இந்த கேம், ஒரு உண்மையான ஸ்டார் வார்ஸ் சூழலை வழங்கும் ஒரு அற்புதமான வேலையை செய்கிறது. ஆயுதங்கள் தொடங்கி ஒலி விளைவுகள் வரையிலாக, இந்த கேமின் அனைத்து அம்சங்களும் மிக யதார்த்தமானதாக இருக்கும்.

ஜெடி நைட் 2 - ஜெடி அவுட்கேஸ்ட்: இதுவொரு தன்னிகரில்லாத ஸ்டார் வார்ஸ் கேம் ஆகும். இது விண்மீனைச் சுற்றி ஓடவும் மற்றும் சாம்ராஜ்யத்தில் சண்டையிடும் ஸ்ட்ராம்ட்ரூப்ப்பர்ஸ் மூட்டுகளை லைட்ஸாபர் மூலம் வெட்டவும் திரைப்படங்களில் காணும் சக்திகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கும் ஒரு இறுதிக் கற்பனை கேம் ஆகும். இதில் விளையாடும் வீர்கள் ஒரு சக்திவாய்ந்த ஜெடி நைட் உணர்வை பெற முடியும்.

ஸ்டார் வார்ஸ் தி ஓல்ட் ரிபப்ளிக்: இந்த கேமில், நீதி மற்றும் அமைதியை நிலைநாட்ட விரும்பும் ஜெடி நைட் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ள முடியும். இந்த கேம் ஆனது இடையே ஏராளமான சைட்- க்வேஸ்ட் களையும் கொண்டிருக்கும்.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

டிசம்பர் 15 -ஆம் தேதி, தி லாஸ்ட் ஜெடி திரைப்படம் வெளியாகும் முன்னரே (டிசம்பர் 14) மும்பையில் அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பானது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே வாங்குவதற்கு கிடைக்கும். ஆன்லைனை பொறுத்தமட்டில் - ​​அமேசான் இந்தியா மற்றும் ஒனப்ளஸ்ஸ்டோர் தளத்தில் வாங்க கிடைக்கும்

நொய்டா மற்றும் பெங்களூரில்

நொய்டா மற்றும் பெங்களூரில்

மேலும், நொய்டா மற்றும் பெங்களூரில் உள்ள ஒன்ப்ளஸ் எக்பீரியன்ஸ் மண்டலங்களில் டிசம்பர் 15-ஆம் தேதியிலிருந்து இந்த சாதனம் விற்பனையாகும். அந்நாளில் தான் தி லாஸ்ட் ஜெடி திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது கிடைக்கக்கூடியத்தனமாய் பற்றிய தகவகள்ல் கிடைத்தாலும் கூட, விலை மற்றும் சேமிப்புத் திறன் பற்றிய வார்த்தைகள் இப்போது அறியப்படவில்லை. இந்த விவரங்கள் டிசம்பர் 14-ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Star Wars games we enjoyed playing on OnePlus 5T with Gaming DND mode on. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot