புதிய எச்டிசி இவோ 3டி போன் அறிமுகம்: ஸ்பிரிண்ட்

Posted By: Staff

புதிய எச்டிசி இவோ 3டி போன் அறிமுகம்: ஸ்பிரிண்ட்
தனது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றும் வகையில், புதிய 3டி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவோ 3டி ஸ்பிரிண்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் புதிய 3டி தொழில் நுட்பத்துடன் வந்துள்ளது.

இது 4.3 இஞ்ச் தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதையும் துல்லியமான முறையில் பார்க்க விரும்புகிறீகளா? அப்படியென்றால் இதில் உள்ள க்யூ ஹைடெபினிஷன் அகலத்திரை வசதி 960X450 பிக்செல் துல்லியம் கொண்ட கேமராவினால் எதையும் தெளிவாகக் படம் பிடிக்க முடியும்.

1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் உள்ளதால் எதையும் மிகுதியான வேகத்துடன் தகவல்களைத் தேடி எடுக்க முடியும்.

சுலபத்தில் பேட்டரி தீர்ந்து விடுமே என்ற கவலையே உங்களுக்குத் தேவையில்லை. இதில், உங்களின் வசதிக்காக 1,730 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

உபயோகிப்பவரின் நன்மையை மனத்தில் கொண்டு அவர்களின் ஒவ்வொரு தேவையும் பட்டியலிடப்பட்டு, அதன் பின் தயாரிக்கப்பட்டுள்ளதே இந்த மாடலின் தனித்துவம். வீடியோ காலிங் வசதிக்காக கூடுதலாக முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இவிஒ 3டி மாடல் வாடிக்கையாளர்களுக்கு,தொழில் நுட்ப வலிமையை எடுத்துரைக்கும் போன் என்று கூறினால் மிகையாகாது.

இப்பொழுது இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியின் வேகம் இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டுள்ள
என்விஐடிஐஏ டெக்ரா 2 கொண்ட வேகத்தையும் விட பன்மடங்கு அதிகம். இவோ 3டி மாடல் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இதில் 3டி சம்மந்தப்பட்ட விஷயங்களை பதிவு செய்யவும் முடியும், பதிவு செய்தவற்றைக் கண்டு பயன்பெறவும் முடியும். நீங்கள் பதிவேற்றம் செய்தவற்றை 3டி ஹைடெபினிஷனில் கண்டு ரசிக்க முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot