Home
Mobile

மீண்டும் சந்தைக்குள் ஸ்பைஸ் : 4ஜி அம்சத்துடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

உடன் 2700எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குகிறது, இது 270 மணிநேரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதென்று நிறுவனம் கூறுகிறது

By Muthuraj

இந்தியாவின் ஸ்பைஸ் மொபிலிட்டி மற்றும் சீனாவின் ட்ரான்ஸ்ஷன் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றிற்கு இடையேயான கூட்டு முயற்சியின் மூலம் ஸ்பைஸ் டிவைசஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

4ஜி ஆதரவு கொண்ட இந்த புதிய ஸ்பைஸ் வி801 ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனர் 0.1 விநாடிகளில் சாதனத்தை திறக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இதன் டூயல் ஆப்ஸ் ஆதரவு வழங்கும் கொண்டு, வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பயன்பாடுகளில் இரண்டு அக்கவுண்ட்களை இயக்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

ஸ்பைஸ் வி801 ஸ்மார்ட்போன் அந்த ரூ.7,999/- என்ற விலை நிர்ணயம் பெற்று, தற்போது சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவதற்கு கிடைக்கிறது. இதன் பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில்..

3 ஜிபி ரேம்

3 ஜிபி ரேம்

ஸ்பைஸ் வி801 ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும்; ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. இது 3 ஜிபி ரேம் உடனான 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் (மாதிரி குறிப்பிடப்படவில்லை), மாலி கிராபிக்ஸ் 720 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

2.5டி வளைந்த கண்ணாடியுடனான 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள ஸ்பைஸ் வி801 ஸ்மார்ட்போனின் கேமராதுறையைப் பொறுத்தமட்டில், முன் மற்றும் பின்பக்க இரண்டிலும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8-மெகாபிக்சல் கேமிராக்களை கொண்டிருக்கிறது.

கேமரா

கேமரா

குறிப்பாக இதன் பின்புற கேமரா, ஆட்டோஃபோகஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. மறுபக்கம் இதன் முன்பக்க கேமராவின் எப் / 2.0 துளையானது வைட்-ஆங்கிள் செல்பீக்களை கைப்பற்ற உதவும். மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்பும் கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆப்ஸ் க்ளோனிங் அம்சத்துடன் வருகிறது. உடன் 2700எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குகிறது, இது 270 மணிநேரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதென்று நிறுவனம் கூறுகிறது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

ஸ்பைஸ் வி801 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி ஓடிஜி, மைக்ரோ- யூஎஸ்பி, 4ஜி வோல்ட் மற்றும் வில்ட் (ViLTE) ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 8.3 மிமீ தடிமன் மட்டுமே உள்ளது.

Best Mobiles in India

English summary
Spice V801 With 4G VoLTE, Front Flash Camera Launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X