குறைந்த விலையில் நிறைவான தொழில் நுட்பங்களுடன் புதிய ஸ்பைஸ் போன்

By Super
|
குறைந்த விலையில் நிறைவான தொழில் நுட்பங்களுடன் புதிய ஸ்பைஸ் போன்

மலிவு விலையில் சூப்பரான போன்களை வழங்கி வரும் ஸ்பைஸ் மீண்டும் ஒரு புதிய மலிவு விலை போனை அகன்ற திரையுடன் வழங்குகிறது. இந்த புதிய போனிற்கு ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிசன் மி-500 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் குறைந்த விலையில் வந்தாலும் இது 5 இன்ச் அளவு கொண்ட டிஎப்டி எல்சிடி கப்பாசிட்டிவ் மல்டி டச் திரையுடன் வருகிறது.

அதோடு இந்த போன் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் டூவல் சிம் வசதியுடன் வருகிறது. அடுத்ததாக இந்த போன் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் முதல் 6 மாத காலத்திற்கு நெட்கின் ஆண்டிவைரஸ் மற்றும் கூகுள் ப்ளே போன்ற அப்ளிகேசன்களை இலவசமாக இந்த போன் சப்போர்ட் செய்யும்.

இந்த போனில் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் சிபியு, மீடியா டெக் சிப்செட் மற்றும் 512எம்பி ரேம் போன்றவை உள்ளதால் இது அபார வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம். கேமராவைப் பொறுத்த வரை டூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5எம்பி பின்பக்க கேமராவையும், 0.3எம்பி முகப்புக் கேமராவையும் இந்த போன் வழங்குகிறது.

மேலும் இதன் கேமராவில் ஆட்டோ போக்கஸ், டிஜிட்டல் சூம், வீடியோ பதிவு, ஸ்மைல் ஷாட், ஆட்டோ சீன் டிடெக்ட், பெஸ்ட் ஷாட், இவி ப்ராகட் ஷாட் மற்றும் நைட் விஷன் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த போனில் உள்ள 2ஜிபி மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, ப்ளூடுத், யுஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளும் உள்ளன. வெள்ளை நிறத்தில் வரும் இந்த போனில் எப்எம் வசதியும் உள்ளது.

அதோடு இந்த போன் எம்பி4 மற்றும் எம்பி 3, டபுள்யுஎவி, எம்ஐடிஐ போன்ற ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X