வெறும் 112 கிராம் எடையுடன் புதிய டியூவல் சிம் போன்

By Super
|

வெறும் 112 கிராம் எடையுடன் புதிய டியூவல் சிம் போன்

அனைவரின் கவனத்தையும் திருப்புவதற்கு தனது அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஸ்பைஸ் நிறுவனம். புதிய டியூவல் சிம் போனை ஸ்பைஸ் எம்-5370 என்ற பெயரில் வழங்க உள்ளது ஸ்பைஸ் நிறுவனம். இந்த மொபைல் 112 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஸ்பைஸ் எம்-5370 என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடலை பார்த்தவுடன் இது பெரிய திரை வசதி கொண்ட மொபைல் என்பதை உணர முடியும். இந்த மொபைல் கியூவிஜிஏ டிஎப்டி கலர் திரை வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர்ச்சிகரமான தோற்றம் பார்ப்பவர்களைத் தன்வசம் கொண்டு வரச்செய்கிறது.

இதில் விஜிஏ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 640 X 480 பிக்ஸல் ரிசல்யூஷன் வழங்குகிறது. இதன் டிஜிட்டல் சூம் வசதியின் மூலம் புகைப்படங்களை துல்லியமாக பார்க்கவும், எடுக்கவும் உதவும். ஸ்பைஸ் மொபைலில் நைட் விஷன் மற்றும் மல்டி ஷாட் போன்ற வசதிகளும் உள்ளது. எப்எம் ரேடியோ பாடல்களைக் கேட்பதற்கு மிகவும் சிறப்பாக சப்போர்ட் செய்கிறது. எப்எம் ரெக்கார்டும் இதில் செய்து கொள்ள முடியும்.

எஸ்எம்எஸ்/எம்எம்எஸ் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் டி-பிளாஷ் மெமரி கார்டு பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி வரை இதன் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மீடியாப் பிளேயர் மூலம் துல்லியமான ஒளியைக் கேட்க முடியும். இதன் ஆடியோ ப்ளேயர் எம்பி 3, டபிள்யூஎம்ஏ, ஏஎம்ஆர் பார்மெட்களுக்கு சப்போர்ட் செய்கிறது.

மிக சிறப்பான வீடியோ ப்ளேயர் வசதியை கொண்டுள்ளது. இது எம்பி 4 வீடியோ பார்மெட்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் வி2.0 ஏ2டிபி ஸ்டீரியோ புளூடூத், யூஎஸ்பி போர்ட், டபிள்யூஏபி பிரவுசர் போன்ற அற்புதமான வசதிகளைப் பெற முடியும். அதோடு மிக முக்கிய அம்சமான 2,200 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் உங்கள் பேச்சு எங்கேயும் எப்போதும் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு 16 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 600 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.1,800 இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X