புதிய டியூவல் சிம் மொபைல்போன்: ஸ்பைஸ் அறிமுகப்படுத்துகிறது

வெறும் ரூ.1,300 என்ற விலையில் ஒரு டியூவல் சிம் ஹேண்செட்டை வழங்குகிறது ஸ்பைஸ் நிறுவனம்.
44.7 கிராம் இலகு எடையைக் கொண்டது. விலையை போலவே எடையும் மிகக் குறைவாக உள்ளது. 1.77 கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 4.5 சென்டிமீட்டர் டிஎஃப்டி எல்சிடி கலர் டிஸ்ப்ளே வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 128 X 160 பிக்ஸல் ஸ்கிரீன் ரிசல்யூஷன் கொண்டது.
ஸ்பைஸ் எம்-4262 எம்ப்பி-4 ப்ளேயர் வசதி கொண்டது. இதில் மிகவும் எளிதாக விடியோ ரிக்கார்டிங் செய்து கொள்ள முடியும். இந்த மாடலில் எம்பி-3, பாலிஃபோனிக், எம்ஐடிஐ, எப்எம் ரேடியோ, அலாரம் போன்ற வசதிகளும் உள்ளது. நெட் வசதியைத் தொடர்பு கொள்ள ஜிப்பிஆர்எஸ் தொழில் நுட்பம் வழங்கபட்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி/டி ப்ளாஷ் கார்டு ஸ்லாட் வசதி கொண்டது.
இதன் மெமரி வசதியை 8 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். 1,000 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 4 மணி நேரம் டாக் டைம் வசதி மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்ட்-பை டைமும் கிடைக்கிறது. வி2.0 புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதியினால் தகவல் பரிமாறிக் கொள்வது மிகவும் எளிதாகிறது. எம்-4262 மொபைல் ரூ.1,300 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications