மேம்படுத்தப்பட்ட எம்ஐ-350 மொபைலை அறிமுகப்படுத்துகிறது ஸ்பைஸ்

Posted By: Staff

மேம்படுத்தப்பட்ட எம்ஐ-350 மொபைலை அறிமுகப்படுத்துகிறது ஸ்பைஸ்
குறைந்த விலையில் டியூவல் சிம் வசதிகொண்ட புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை முதன்முதலில் இந்திய சந்தையில் ஸ்பைஸ் அறிமுகம் செய்கிறது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எம்ஐ-350 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட போனாக இன்னும் ஓரிரு நாளில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

ஸ்பைஸ் எம்ஐ-350 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஸ்பைஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியான பேபால் கபா கூறுகையில், இந்த ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் டியூவல் சிம் வசதிகொண்ட இந்த போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும்," என்று கூறினார்.

ஸ்பைஸ் எம்ஐ-350 மொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது துல்லியமான புகைப்படம் எடுக்க உதவும். இதற்கு முன்பு விற்பனை செய்யப்பட்டு வரும் எம்ஐ-350 என்று ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரையோ வெர்ஷன் கொண்ட மொபைல். இது 600 எம்எச்இசட் பிராசஸர் கொண்டது.

ஆனால், தற்போது விற்பனைக்கு வரும் எம்ஐ-350 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். ஜிபிஎஸ், 3ஜி சப்போர்ட், வைபை போன்ற வசதிகளின் மூலம், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அது இருந்தது. தகவல் பரிமாற்றத்திற்காக இதில் புளூடூத் வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்பொழுது வர இருக்கும் புதிய ஸ்பைஸ் எம்ஐ-350 மொபைல், டியூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு போன். இந்த வகை வசதி கொண்ட போன் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதோடு மோட்டோரோலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மைல்ஸ்டோன் எக்ஸ்டி-800 என்ற போன், ஸ்பைஸ் மொபைலைப் போலவே டியூவல் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு போன். ஆனால் அதனுடைய விலை ரூ.19,000.

இப்பொழுது ஸ்பைஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் ஆன்ட்ராய்டு டியூவல் சிம் மொபைலோ வெறும் ரூ.9,000 விலையில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால், ஸ்பைஸ் எம்ஐ-350 மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்