ஸ்பைஸ் மற்றும் சாம்சங் கார்பி மொபைல்கள்- ஒப்பீடு

Posted By: Staff

ஸ்பைஸ் மற்றும் சாம்சங் கார்பி மொபைல்கள்- ஒப்பீடு
ஸ்பைஸ், சாம்சங் என்ற இரண்டு நிறுவனங்கள் தன்னுடைய புதிய படைப்பை வெளியிட்டுள்ளன. ஸ்பைஸ் எம்ஐ-270 மற்றும் சாம்சங் கார்பி-II என்பதே அந்த புதிய மாடல்கள்.

ஆன்ட்ராய்டு வசதி கொண்ட, இந்த இரண்டு மாடல்களும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதன. இந்த இரண்டு மாடல்களுமே டியூல் சிம் வசதி கொண்டது.

ஸ்பைஸ் எம்ஐ-270 ஹேண்செட் ஆன்ட்ராய்டு 2.2 ஃப்ரையோ வசதி கொண்டுள்ளது. இது 7 சென்டி மீட்டர் க்யூவிஜிஏ ஃப்புல் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதில் டியூல் சிம் காம்ப்பாட்டிபிலிட்டி வசதி கொண்டது. சாம் கார்பி மொபைல் எஸ்-3850 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. ஸ்பைஸ் ஹேண்ட்செட்டில் டிஃப்ளாஷ் கார்டை 16 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

ஸ்பைஸ் எம்ஐ-270 மற்றும் சாம்சங் கார்பி-II மாடல்களில் 26 எம்பி வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது. அதோடு இதன் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்ன்ல் வசதியை 16 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு மொபைல்களிலுமே 2 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 1600 X 1200 பிக்ஸல் துல்லியத்தை வழங்கும்.

சிறந்த டாக் டைம் கொடுப்பதில் ஸ்பைஸ் மொபைலை விடவும் சாம்சங் மொபைல் ஒருபடி மேலே உள்ளது. ஏனென்றால் சாம்சங் மாடல் 9 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைமும், 620 மணி நேரம் ஸ்டான்பை டைமும் கொடுக்கிறது. அதே ஸ்பைஸ் மாடல் 3 மணி நேரம் டாக் டைம் மற்றும் 320 மணி நேரம் ஸ்டான்பை டைமும் கொடுக்கிறது.

சாம்சங் மாடலில் உள்ள புளூடூத் வெர்ஷன் 3.0 ஏ2டிப்பி கொண்டது. மைக்ரோ யூஎஸ்பி, ஜிப்பிஆர்எஸ், எட்ஜ் டெக்னாலஜி போன்ற சிறந்த தொழில் நுட்ப வசதிகள் இந்த இரண்டு மாடல்களிலுமே உள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் கார்பி மொபைலின் விலை ரூ.4,969. ஆனால் ஸ்பைஸ் எம்ஐ-270 ஹேண்செட் ரூ.5,200 என்று கார்பி மாடலையும் விட கொஞ்சம் விலை அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot