ஸ்பைஸ் எம்5350 மற்றும் எம்5500 போன்களின் சிறப்பம்சங்கள்

Posted By: Staff

ஸ்பைஸ் எம்5350 மற்றும் எம்5500 போன்களின் சிறப்பம்சங்கள்
பட்ஜெட் போன்கள்தான் மார்க்கெட்டில் எடுபடும் என்பதை மனதில்கொண்டு சளைக்காமல் அடுத்தடுத்து பட்ஜெட் விலை கொண்ட மொபைல்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது ஸ்பைஸ் நிறுவனம்.

இந்த வகையில், அந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களான எம் 5350 எலைட் மற்றும் 5500 போன்களின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

இரண்டு போன்களும் டியூவல் ஜிஎஸ்எம் சிம் கார்டு பொருத்தும் வசதிகொண்டது. எம் 5500 போனில் டச் ரெசிஸ்டிவ் ஸ்கிரீன் மற்றும் பேனல்களை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம் 5350 எலைட் ஆல்பாநியூமெரிக் கீபேடுடன் வந்துள்ளது.

இரண்டு போன்களும் வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. எலைட்டில் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான அட்டவணையை தயார் செய்ய முடியும்.

எலைட்டில் 0.3 மெகாபிக்செல் கேமரா, மியூசிக் பிளேயர் மற்றும் எப்எம் ரேடியோ மற்றும் எப்எம் ரேடியோ ரெக்கார்டிங் வசதிகள் உள்ளன. அதே, எம்5500 போனில் 1.3 மெகாபிக்செல் கேமரா மற்றும் மாறுபடுகிறது. பாக்கி அனைத்து அம்சங்களும் எலைட்டில் உள்ளது போன்றுதான் எம்5500ல் இருக்கிறது.

எலைட்டில் புளூடூத், இன்டர்நெட்டுக்காக போனை மோடமாக பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. எம் 5500 போனில் யூஎஸ்பி ஸ்லாட் மற்றும் 110 கேபி மெமரி மற்றும் கூடுதல் மெமரி கார்டு பொருத்தும் வசதிகளை கொண்டுள்ளது.

இரண்டு போன்களும் பேட்டரி பேக்கப்பில் சிறப்பாக இருக்கிறது. எஸ்ஓஎஸ், மொபைல் டிராக்கர் மற்றும் பேஸ்புக் ஆக்செஸ் உள்ளிட்டவை பொதுவானதாக உள்ளது. ஓபரா மினி பிரவுசர் பிரச்னை இல்லாத இன்டர்நெட் பயன்பாட்டை கொடுக்கிறது.

தேவையான அளவுக்கு அடிப்படை அம்சங்களை கொண்டுள்ள இந்த பட்ஜெட் போன்களில், எம் 5350 எலைட் ரூ.1,800 விலையிலும், எம் 5500 போன் ரூ.3,600 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot