5 இஞ்ச் திரையில் புதிய ஸ்பைஸ் ஸ்மார்ட்போன்!

By Super
|
5 இஞ்ச் திரையில் புதிய ஸ்பைஸ் ஸ்மார்ட்போன்!

இந்திய நிறுவனமான ஸ்பைஸ் தனது தொழில் நுட்ப திறமையில் முன்னேறி கொண்டே வருகிறது. இந்நிறுவனம் இன்று 2 ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிஸன் எம்ஐ-500 மற்றும் ஸ்பைஸ் ஸ்டெல்லர் க்ரேஸ் எம்ஐ-355 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே டியூவல் சிம் தொழில் நுட்ப வதியினை கொண்டது.

இதில் ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிஸன் எம்ஐ-500 என்ற இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். தொடுதிரை வசதி கொண்ட இந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் கொண்டது.

ஸ்பைஸ் ஸ்டெல்லர் க்ரேஸ் எம்ஐ-355 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஐசிஎஸ் அப்டேஷன் மட்டும் அல்லாமல் இன்னும் பல சிறந்த தொழில் நுட்பங்களையும் வழங்கும்.

எம்ஐ-500 ஸ்மார்ட்போனைவிட எம்ஐ-355 ஸ்மார்ட்போனின் திரை வசதி சற்று குறைவு தான். இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது.

எம்ஐ-500 ஸ்மார்ட்போன் டியூவல் கேமராவினை கொண்டது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும். எம்ஐ-355 ஸ்மார்ட்போனிலும் 5 மெகா பிக்ஸல் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்ஐ-500 ஸ்மார்ட்போன் 2,150 எம்ஏஎச் பேட்டரியினையும், எம்ஐ-355 ஸ்மார்ட்போன் 1,420 எம்ஏஎச் பேட்டரியினையும் கொண்டது. உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையினையும் பார்ப்போம்.

ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிஸன் எம்ஐ-500 ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையையும், ஸ்பைஸ் ஸ்டெல்லர் எம்ஐ-355 ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையினையும் கொண்டது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X