Home
Mobile

அட! பட்ஜெட் விலையில் ஸ்பைஸ் ஸ்மார்ட்போன்!

By Super
அட! பட்ஜெட் விலையில் ஸ்பைஸ் ஸ்மார்ட்போன்!

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஒரு புதிய ஸ்டெல்லர் க்ரேஸ் எம்ஐ-355 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கிறது ஸ்பைஸ் நிறுவனம்.

3.5 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

மேலும் இதன் விலை அனைத்து வாடிக்கையாளர்களும் எளிதாக பெறும் வகையில் தான் இருக்கும். ஸ்மார்ட்போன்களின் பிராசஸர், பேட்டரி என்று எடுத்து கொண்டால் இதன் ஆற்றல் மிக முக்கியமான ஒன்றாக

இருக்கிறது.

ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை அப்கிரேட் செய்யும் வசதியினையும் ஸ்பைஸ் நிறுவனம் வழங்கும்.

இதில் உள்ள வீடியோ காலிங் மற்றும் சாட்டிங் வசதிக்காக விஜிஏ முகப்பு கேமராவும், 5 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதன் டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை திருப்தி அளிக்கும் என்று கூறலாம்.

வெள்ளை நிறுத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை பார்ககும் போது குறைந்த விலை என்றே சொல்ல தோன்றாது. அந்த அளவுக்கு இதன் வடிவமைப்பு இருக்கும் என்று கூறலாம். ஸ்பைஸ் எம்ஐ-355 ஸ்மார்ட்போன் ரூ. 6,599 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X