புதிய பட்ஜெட் போனை களமிறக்குகிறது ஸ்பைஸ்

Posted By: Staff
புதிய பட்ஜெட் போனை களமிறக்குகிறது ஸ்பைஸ்
எல்லா மொபைல்களும் வடிவமைப்பில் தான் ஸ்டைலாக இருக்கும். ஆனால் ஸ்பைஸ் மொபைல்கள் தனது பெயரிலேயே ஸ்டைலாக கலக்குகிறது.

புளூபெர்ரி ஆரா என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது ஸ்பைஸ் நிறுவனம். மொபைல் நிறுவனங்கள் உயர்ந்த தொழில் நுட்பத்தைக் கொடுத்து அதிகமாக சாதித்து வருகிறது.

இதற்கு  ஸ்பைஸ் நிறுவனமும் ஒரு உதாரணம் என்று கூறலாம். ஏனென்றால் புதிய புதிய மொபைல்களை படைத்துக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம்.

கியூவர்டி கீப்பேட்டுடன் புளூபெர்ரி ஆரா மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலை ஆப்பரேட் செய்வதிலும் எந்தவிதமான சிரமும் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது. இதனை இயக்குவது மிகவும் எளிது.

ஸ்பைஸ் புளூபெர்ரி மொபைல் 2.6 இஞ்ச் கலர் திரை கொண்டுள்ளது. இந்த திரை 320 X 240 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கிறது.

6.9 எம்பி இன்டர்னல் மெமரி வசதியினையும் கொண்டுள்ளதால் தேவையான தகவல்களை இதன் மூலம் சேகரிக்க முடியும். டி-ஃப்ளாஷ் டைப் மெரி கார்டுக்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது.

இதில் 2.0 மெகா பிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் சூம் வசதியினையும் பெற முடியும். அதே சமயம் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் எளிதாக செய்யலாம்.

இப்பொழுதெல்லாம் புளூடூத் வசதி மொபைலுக்கு அடிப்படை வசதியாகிவிட்டது. அப்படிப்பட்ட புளூடூத் வசதியும் புளூபெர்ரி மொபைலில் உள்ளது.

இந்த மொபைலில் ஜாவா மற்றும் அப்ளிகேஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறந்த பொழுதுபோக்க அம்சத்தினையும் பெற முடியும்.

இந்த ஸ்பைஸ் புளூபெர்ரி மொபைல் ரூ.4,000 விலையை எட்டும். இதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிக்கு தகுந்த விலையை இந்த மொபைல் கொண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot