மலிவு விலையில் மகத்தான ஸ்பைஸ் மொபைல்!

By Super
|
மலிவு விலையில் மகத்தான ஸ்பைஸ் மொபைல்!

பட்ஜெட் விலை கொண்ட மொபைல்களுக்கு எப்பொழுதுமே மவுசு உண்டு. இதை கவனத்தில்கொண்டு எம்-5220 என்ற புதிய பட்ஜெட் மொபைலை வெளியிட்டுள்ளது ஸ்பைஸ்.

1.96 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த புதிய மொபைல், 176 X 220 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். எம்-5220 மொபைலில் எக்ஸ்டர்னல் மெமரியை 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதில் உள்ள தொழில் நுட்பங்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

வேலை பளூ அதிகமாவதால், மொபைல்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் தேவைப்படுகின்றது. இந்த புதிய எம்-5220 மொபைலில் மல்டி மீடியா பிளேயர் வசதியும் உள்ளது. 129 கிராம் எடை கொண்ட இந்த மொபைலில் 1,200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினை வழங்கும்.

இதில் 8.4 மணி நேரம் டாக் டைமையும், 302.5 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். அதிக நேரம் தொடர்பு கொள்வதற்கு இதன் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும். நிறைய வசதிகளை கொடுக்கும் இந்த மொபைல் ரூ.2,600 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X