ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டியவை...

Posted By:

ஆன்ட்ராய்டு என்ற வார்த்தையே போதும் ஆளை மயக்குவதற்கு! என பல்வேறு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் நினைக்கின்றனவோ என்னவோ ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட் வகை கணினிகள் பெருமளவில் அதிகரித்தே வருகிறது. பெரும்பாலான இளைய சமுதாயம் ஆன்ட்ராய்டு என்ற பெயரிலேயே லயித்திருப்பதும் நிதர்சனமே!

நீங்கள் புதிய ஆன்ட்ராய்டு கைபேசியோ அல்லது மாத்திரை கணினியையோ வாங்கும்பொழுது எதைப்பொருத்து வாங்கவேண்டும் என்பதை விளக்கவே இந்த கட்டுரை. நீங்கள் புதிய சாதனங்கள் வாங்கும்பொழுது இத்தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவலாம்.

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மொபைல் போன்கள் இவைதான்...

Click Here For More New Smartphone Images

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரேம் நினைவகம் :

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டியவை...

புதிய ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது முக்கியமாக பார்க்கவேண்டியது அதன் ரேம் நினைவகத்தின் அளவைத்தான். இதைப்பொருத்தும் உங்களது செல்போனின் செயல்திறன் இருக்கும். குறைந்தது 512 எம்பி ரேம் அளவாவது இருக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை மட்டும் சற்றே அதிகமாக இருக்கும்.

செயலி :

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டியவை...

புதிய ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது மிக மிக முக்கியமானது இந்த ப்ராசெசர் என அழைக்கப்படும் செயலிகளே. இதைப்பொறுத்தே செல்போன் அல்லது டேப்லெட் கணினியின் வேகம் இருக்கும். இதன் அளவு குறைந்தது 1 GHz அளவாவது இருக்கவேண்டும்.

வாரண்டி:

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டியவை...

புதிய ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது வாரண்டியை மிகமுக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனெனில் செல்போன் மிகவிரைவில் பழுதுபட்டால் இது உதவியாக இருக்கும். குறைந்தது 1 வருடம் இருந்தாலே நலம்.

ஆன்ட்ராய்டு இயங்குதளம் :

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டியவை...

புதிய ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது அதன் இயங்குதளம் பற்றிய விவரங்களை பார்த்தல் அவசியம். ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பல பதிப்புகள் உள்ளன. ஆன்ட்ராய்டு 2.3 போன்றவை பழைய பதிப்புகள். 4.1 ஆக இருந்தால் நலம்.

கேமரா :

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது நினைவில் இருக்கவேண்டியவை...

ஆன்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட் வாங்குவதற்கு முன்னரே, அதன் கேமரா தகவல்களை தெரிந்திருக்கவேண்டும். குறைந்தது 5 மெகாபிக்ஸல்கள் அளவுடைய கேமரா இருப்பதே நல்லது. சிறந்த வீடியோக்கள் எடுப்பதற்கும், புகைப்பட்டங்கள் எடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Smartphone Images

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot