Home
Mobile

யாரு விடுவா? டிஸ்கவுண்ட்டில் ரியல்மி 5ஜி போன்கள்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60x 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி போனுக்கு தற்போது சிறப்பு தள்ளுபடி கிடைத்துள்ளது. இதுதவிர ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி போனுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி போனின் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் தற்போது இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.11,999 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 கூப்பன் கிடைக்கும். எனவே இந்த வேரியண்டை ரூ.13,999 விலையில் வாங்க முடியும்.

டிஸ்கவுண்ட்டில் ரியல்மி 5ஜி போன்கள்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.2000 மதிப்புள்ள கூப்பன் கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.21,999 விலையில் வாங்க முடியும். மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு போன்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன்களை அமேசான் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி அம்சங்கள்: 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2400 பிக்சல்ஸ், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

டிஸ்கவுண்ட்டில் ரியல்மி 5ஜி போன்கள்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Special discount on Realme Narzo series phones on Amazon: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X