Home
Mobile

என்னப்பா சொல்றீங்க.. கஸ்டமர்களே ஷாக் ஆவுறாங்க.. இவ்ளோ கம்மி விலையில் இப்படி ஒரு Realme போன்-ஆ!

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த "பட்ஜெட் பத்மநாதன்களையும்", அதாவது எதை வாங்கினாலும் அதை பட்ஜெட் விலையில் வாங்கும் மக்களை.. தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் சீன நிறுவனமான ரியல்மி (Realme) ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

நாம் இங்கே பேசுவது ரியல்மி சி53 (Realme C53) மாடலை பற்றித்தான். ரியல்மி நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் ரியல்மி சி55 (Realme C55) ஸ்மார்ட்போனின் புதிய ரெயின் பாரஸ்ட் (Rainforest ) கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்திருந்தது.

இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு Realme போன்-ஆ.. கஸ்டமர்களே ஷாக்!

அதனை தொடர்ந்து ரியல்மி சி53 ஸ்மார்ட்போனும் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால், ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் டிசைன், அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது (நெருப்பில்லாமல் புகையுமா என்ன?).

டிப்ஸ்டர் பராஸ் குக்லனி (@passionategeekz) வழியாக கிடைத்த தகவலின்படி, ரியல்மி சி53 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.9,000 மற்றும் ரூ.11,000 க்குள் இருக்கும். இந்த அளவிலான பட்ஜெட் விலைக்கு ரியல்மி சி53 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் கிடைக்கும் என்பது தான் ஹைலைட்!

ரியல்மி சி53 ஸ்மார்ட்போனானது 12ஜிபி ரேம் + 128 ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். இதிலுள்ள 12ஜிபி ரேம் என்பது 6ஜிபி ஃபிசிக்கல் ரேம் (Physical RAM) மற்றும் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) ஆக பிரிக்கப்படும்.

மேலும் ரியல்மி சி53 ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது யுனிசாக் டி612 ப்ராசஸர் (Unisoc T612 SoC) மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 0.3 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் இடம்பெறலாம்.

பெரும்பாலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் அனுப்பப்படலாம். மேலும் இதில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியும் பேக் செய்யப்படலாம். கடைசியாக இது சாம்பியன் கோல்ட் (Champion Gold) மற்றும் மைட்டி பிளாக் (Mighty Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட எல்லா அம்சங்களும் ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் போனில் இடம்பெறும் அம்சங்களை போல தெரிகிறது. உண்மையாகவே இதெல்லாம் ரூ.9000 முதல் ரூ.11,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைத்தால்.. ரியல்மி சி53 ஆனது "பெஸ்ட் செல்லிங் போன்களில்" (Best Selling Phones) ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Soon Realme to Launch New Budget Phone Realme C53 Price in India Could be Under Rs 11000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X