Home
Mobile

என்னது இது.. X பதிவால் குழப்பம்.. Nothing-ன் அடுத்த போன்-ஆ.. இல்ல வேற ஏதாவது-ஆ!

மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போல நத்திங் நிறுவனம் தெளிவான விவரங்களை மற்றும் டீஸர்களை வெளியிடுவது கிடையாது. அதற்கு சரியான எடுத்துக்காட்டு, இந்திய சந்தையில் மிகவும் சமீபத்தில் அறிமுகமான நத்திங் போன் 2ஏ மாடலின் ஸ்பெஷல் எடிஷன் தான். இது குறித்து நத்திங் நிறுவனம் வெளியிட்ட டீஸர் ஆனது நத்திங் போன் 2ஏ மாடலானது ரெட், யெல்லோ மற்றும் ப்ளூ ஆகிய மூன்று புதிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்கிற எண்ணத்தை மேலோங்க செய்தன. ஆனால் வெளியானதோ ரெட், யெல்லோ மற்றும் ப்ளூ காம்பினேஷன் உடனான ஒரு ஸ்பெஷல் எடிஷன் தான்!

அதைப்போலவே, தற்போதும் நத்திங் நிறுவனமானது தனது எக்ஸ் தளம் வழியாக மேலுமொரு குழப்பமானடீஸரை வெளியிட்டுள்ளது. கார்ல் பெய் தலைமையிலான நத்திங் பிராண்ட் ஆனது சமூக ஊடகங்களின் வழியாக தனது டுத்த தயாரிப்பின் வெளியீட்டை டீஸ் செய்கிறது என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.

என்னது இது.. X பதிவால் குழப்பம்.. Nothing-ன் அடுத்த போன்-ஆ!

ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதை தான் கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் இந்த பிராண்ட் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறுமனே 3, 2, 1 என்கிற எண்களை மட்டுமே பகிர்ந்துள்ளது.இதன்மூலம் அடுத்த அறிமுகமானது - நத்திங் போன் 3ஆக இருக்கலாம் என்கிற யூகங்கள் கிளம்பத்தொடங்கி உள்ளன.

நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் "வாரிசான" நத்திங் போன் 3 மாடலை பற்றிய விவரங்கள் கடந்த சில தினங்களாகவே வெளியான வண்ணம் உள்ளன. பழைய நத்திங் போன் 2 ஆனது ஜூலை 2023 இல் அறிமுகம் ஆனதை கருத்தில் கொண்டால் நத்திங் போன் 3 மாடலும் கூட இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். ஒருவேளை இது சற்றே முன்பாக ஜூன் 2024 இல் கூட வெளியாகலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது கடந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் அறிமுகமான நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆகையால் இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

நத்திங் போன் 3 மாடலில் இடம்பெறவுள்ள இது முற்றிலும் ஒரு புதிய சிப்செட் ஆகும். சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஷாவ்மீ சிவி 4 ப்ரோ (Xiaomi Civi 4 Pro), ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) மற்றும் ஐக்யூ இஸட்9 டர்போ (iQOO Z9 Turbo) போன்ற ஸ்மார்ட்போன்களிலும் கூட இந்த சிப்செட் தான் பேக் செய்யப்பட்டுள்ளது.

சுவாரசியமாக ரெட்மி டர்போ 3 இந்தியாவில் போக்கோ எப்6 (POCO F6) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடவே ஐக்யூ இஸட்9 டர்போ மாடலும் கூட இந்திய சந்தையில் வித்தியாசமான பிராண்டிங்குடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஆக நத்திங் போன் 3-க்கான போட்டியாளர்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன.

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ 40,000 - ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது கடும் விலை வீழ்ச்சிகளுக்கு பின்னர் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்தியாவில், நத்திங் போன் 2ஏ மாடலானது பட்ஜெட் விலையில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது நத்திங் போன் 3-யின் விலையை "இன்னும் சற்று" குறைக்கவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Soon Nothing to Launch Its New Product Could be Nothing Phone 3 What We can Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X