Home
Mobile

சலாம் ராக்கி பாய்.. Google-ன் முதல் "டபுள் டிஸ்பிளே" போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன்.. கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருக்கும் அம்சங்களுடன் வரும் "வழக்கமான" ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது, ஃபோல்டபிள் டிஸைனுடன் (Foldable Design) வரும் ஃபோல்ட் (Fold) மற்றும் ஃபிளிப் (Flip) போன்கள் கூட்டத்தை விட்டு தனித்து நிற்கின்றன என்பதில் சந்தேகமே வேண்டாம்!

2 ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வழக்கம் / பழக்கம் கொண்டவர்களெல்லாம், இன்னும் சிறிது காலம் கழித்து ஒரு "நார்மல்" போனையும், கூடவே ஒரு ஃபோல்டபிள் போனையும் கையில் வைத்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் போட்டி போட்டுக்கொண்டு ஃபோல்டபிள் போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

Google-ன் முதல்

சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் (Galaxy Z Fold), கேலக்ஸி இசட் ஃபிளிப் (Galaxy Z Flip) சீரிஸ் போன்களுக்கும், மோட்டோரோலாவின் மோட்டோ ரேஸர் (Moto Razr) போன்களுக்கும் போட்டியாக ஓப்போவின் ஃபைண்ட் என்2 ஃபிளிப் (Oppo Find N2 Flip) போன் அறிமுகமாகி விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது!

இதற்கிடையில் கூகுள் (Google) நிறுவனமும், அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை (Google's First Foldable Phone) வருகிற ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) என்று அழைக்கப்படும் கூகுளின் முதல் ஃபோல்டபிள் போனின் டிசைன், விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

பிக்சல் ஃபோல்ட் (எதிர்பார்க்கப்படும்) டிசைன்: கிடைக்கப்பெற்ற தகவல்கள் எல்லாமே இது ஒப்போ ஃபைண்ட் என் ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பையே கொண்டிருக்கும் என்று பரிந்துரைக்கின்றன. இது ஹோல்-பஞ்ச் கேமரா கட்அவுட் உடனான 5.79-இன்ச் அவுட்டர் டிஸ்பிளே மற்றும் செல்பீ கேமராவிற்கான கட்அவுட் உடனான 7.69-இன்ச் இன்னர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்சல் ஃபோல்ட் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்: இது 12ஜிபி வரையிலான ரேம் உடனான கூகுளின் டென்சர் ஜி2 சிப்செட்டை பேக் செய்யலாம். மேலும், இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்) உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆப்ஷன்களில் வெளியாகலாம்.

பிக்சல் ஃபோல்ட் (எதிர்பார்க்கப்படும்) விலை: 9டூ5கூகுள் வழியாக கிடைத்த தகவலின்படி பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் 1400 அமெரிக்க டாலர்களாக இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1,15,590 ஆக இருக்கலாம். இருப்பினும் ஃப்ரன்ட்பேஜ்டெக் வழியாக கிடைத்த தகவலின்படி இது ரூ.1,48,530 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

பிக்சல் 7ஏ எப்போது அறிமுகமாகும்? கூகுள் பிக்சல் ஃபோல்ட் அறிமுகமாகும் அதே தேதியில் கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு போன்களுடன் சேர்த்து பிக்சல் பட்ஸ் ஏ-சீரீஸின் (Pixel Buds A-Series) புதிய ப்ளூ கலர் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தலாம்.

கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ எப்போது அறிமுகமாகும்? வருகிற 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. அம்சங்களை பொறுத்தவரை இது கூகுள் டென்சர் ஜி3 எஸ்ஓசி (Google Tensor G3 SoC) மூலம் இயக்கப்படலாம் என்கிற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது.

Photo Courtesy: Front Page Tech / 9to5 Google

More from GizBot

Best Mobiles in India

English summary
Soon Google To Launch Its First Foldable Phone Check Launch Date Price and Specifications of Pixel Fold
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X