ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1.!
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் ஸ்மார்ட்போனில் 2870எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் நடைபெரும் எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி புதிய சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக இந்த சோனி எக்ஸ்பீரியா இசெட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் அசத்தலான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என உறுதிபடுத்தியுள்ளது, அதன்படி இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைவிகிதம்:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடல் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 5.7-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு
வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845:
புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும், அதன்பின்பு
ஆணட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3டி கிளாஷ்:
வரவிருக்கும் எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3டி கிளாஷ் கொண்டிருக்கிறது, மேலும் நான்கு வண்ண மாறுபாடுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கருப்பு, பசுமை, வெள்ளி மற்றும் பிங்க் நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடல் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

எக்ஸ்இசெட்2 கேமரா:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 19எம்பி ரியா கேமரா வசதியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு 4கே வீடியோ பதிவு மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு எக்ஸ்இசெட்2 காம்பாக்ட் ஸ்மார்ட்போனில்
2870எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


எம்டபுள்யூசி 2018:
இந்த மாதம் 26-ம் தேதி எம்டபுள்யூசி 2018-நிகழ்ச்சியில் சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.


Click it and Unblock the Notifications