Home
Mobile

சோனி எக்ஸ்பீரியா இசட்3 மற்றும் 10 போட்டியாளர்கள், சிறந்தவைகளுக்கும் மற்றவைகளுக்கமான வேறுபாடுகள்

முதல் தர ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடமிருந்து தேவைக்கும் அதிகாமான ஸ்மார்ட் போன் மாடல்களை இந்தாண்டு நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். இந்தியாவில் வளர்ந்து வரும் உலகத்தர உற்பத்தியாளர்களே இந்த போட்டிக்கு முக்கிய காரணம். ஏற்கனே ஆப்பிள், சாம்சங் மற்றும் ஏஹ்டிசி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக கவனம் செலுத்தும் நிலையில் ஜப்பான் உற்பத்தியாளரான சோனியின் வரவு சந்தையில் பல மாற்றங்களை ஏர்படுத்தியுள்ளது அதுவும் அதன் சமீபத்திய வரவான எக்ஸ்பீரியா இசட் 3 இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே குறிப்பிடலாம்.

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 ரூ. 51,990 க்கு குறை சொல்ல முடியாத வடிவமைப்பு மற்றும் புதுமையான ஹார்டுவேர் கொண்டு வெளியானது. இருந்தும் சந்தையில் தற்போது ரூ. 49,990 க்கு சோனி எக்ஸ்பீரியா இசட் 3 கிடைக்கின்றது.

தரமான ஹார்டுவேரை ஏற்கனவே கொடுத்திருக்கும் சோனி இம்முறை அதை விட சிறப்பான கருவியை இதுவரை இல்லாத அளவு தரமாக கொடுக்க இருக்கிறது. ஏற்கனவே சோனி எக்ஸ்பீரியா இசட் 3 பயனாளிகளுக்கு மட்டும் தான் இது புரியும்.

1

1

ஆப்பிள் ஐபோன் 6, 4.7 இன்ச் ரெட்டினா எஹ்டி எல்ஈடி டிஸ்ப்ளேவும், சோனி எக்ஸ்பீரியா இசட் 3, 5.2 இன்ச் டிஸ்ப்ளே 1920*1080 ரெசல்யூஷன் கொடுக்கிறது.

பெரிய டிஸ்ப்ளேவோடு இல்லாமல் எக்ஸ்பீரியா இசட் 3, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ராம் உள்ளது. இதுவே ஐபோன் 6 இல் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஏ8 சிப்செட் மற்றும் 1 ஜிபி ராம் தான் உள்ளது.

இதில் சோனி எக்ஸ்பீரியா இசட்3 மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உள்ளது இந்த வசதி ஐபோன் 6 மாடலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2

2

சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ஹார்டுவேரை பொருத்த வரை எக்ஸ்பீரியா இசட் 3 அருகில் வந்தாலும் பேட்டரியை பொருத்த வரை 3,100 பேட்டரியுடன் சோனி தனித்து விளங்குகிறது, சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மாடலில் 2,800 எம்ஏஎஹ் பேட்டரி தான் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ் 5 மாடலில் 16 மெகாபிக்சல் கேமரா எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் 20.7 கேமராவுடன் மோதவே முடியாது

3

3

சாம்சங் கேலக்ஸி ஆல்பா மெட்டல் போன் என்று அழைக்கப்பட்டாலும் சிறப்பம்சங்களை பொருத்தவரை சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலை விட தூரமாகவே இருக்கின்றது. இங்கு சாம்சங் கேலக்ஸி ஆல்பா மற்றும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலுக்கும் இருக்கும் வேற்றுமைகளை பாருங்கள்

சாம்சங் கேலக்ஸி ஆல்பா 4.7 இன்ச் 720 பிக்சல் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீனும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலில் 5.2 இன்ச் ட்ரைலூமினோஸ் டிஸ்ப்ளே உள்ளது.

இதோடு சாம்சங் கேலக்ஸி ஆல்பாவில் 4 குவாட் கோர் பிராசஸர் மூலம் தயாரான ஆக்டா கோர் பிராசஸர், 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ15 மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் இதில் உள்ளது. 2 ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி இருப்பதோடு இந்த பிரசஸரை சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலில் இருக்கும் வேகமான பிராசஸருடன் ஒப்பிடவே முடியாது.

4

4

எஹ்டிசி ஒன் எம்8 4 மெகாபிக்சல் அல்ட்ராபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலில் 20.7 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2.2 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு இந்த கேமரா மூலம் 4கே வீடியோக்களையும் எடுக்க முடியும்.

எஹ்டிசி ஒன் எம்8 முரட்டுத்தனமான போன் இல்லை என்றாலும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 ஐபி 65 மற்றும் ஐபி 68 இந்த போனை நீர் மற்றும் தூசு புகாமல் காக்கின்றது.

5

5

சோனி எகஸ்பீரியா இசட் 3 3,100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில் மோட்டோ எக்ஸ் (2014) 2300 எம்ஏஎஹ் பேட்டரி தான் உள்ளது.

மேலும் மெமரியிலும் சோனி எகஸ்பீரியா இசட் 3 தனித்து விளங்குகிறது. சோனி எக்ஸ்பீரியா இசட் 3 3ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. மோட்டோ எக்ஸ் மாடலில் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி இல்லை

6

6

நோக்கியாவின் புதிய லூமியா 930 தற்சமயம் இந்தியாவில் கிடைத்தாலும் குறிப்பிடும்படியாக புதிய அம்சங்கள் இதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நோக்கியா லூமியா 930 பார்க்க சாதாரன போன் போன்றே இருக்கிறது, ஆனால் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 எல்லா அம்சங்களிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா லூமியா 930 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸரும் எக்ஸ்பரீயா இசட் 3 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் உள்ளது.

மோட்டோ எக்ஸ் போன்றே நோக்கியா லூமியா 930 மாடலிலும் 2,420 எம்ஏஎஹ் பேட்டரியும் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று எக்ஸ்பீரியா இசட் 3 3,100 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

7

7

கூகுள் நெக்சஸ் 5, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் சிறிய 5 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளேவும் உள்ளது. மேலும் 2,300 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் 8 எம்பி / 1.3 எம்பி கேமராக்களும் உள்ளன. சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலில் சிப்பி பிராசஸர் மற்றும் 3ஜிபி ராம் உள்ளது. மேலும் சோனியின் தயாரிப்பில் தரமான 20.7 எம்பி கேமரா டிஎஸ்எல்ஆர் வகைகளுக்கான ஆரம்பம் போன்று இது இருக்கின்றது.

8

8

எல்ஜி ஜி3 ஸ்டைலஸ் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருந்தாலும் 960*540 ரெசல்யூஷனால் பின் தங்கியே இருக்கின்றது. மேலும் எல்ஜி ஜி3 ஸ்டைலஸில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் இருக்கின்றது. மேலும் 13 எம்பி கேமராவுடன் ஒப்பிடும் போது எக்ஸ்பீரியாவின் 20.7 எம்பி கேமராவை எட்ட முடியவில்லை. இந்த கேமரா கொண்டு 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

9

9

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 5 இன்ச் கியுஎஹ்டி ஸ்கிரீன் 960*540 பிக்சல்கள் உள்ளது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம், பேட்டரியை பொருத்த வரை 2600 எம்ஏஎஹ் பேட்டரி உள்ளது. 8 எம்பி கேமராவும் சுமாரான முன்பக்க கேமராவும் உள்ளதால் இது சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலுடன் எந்த வகையிலும் நெருங்கவே முடியாது

10

10

எஹ்டிசி ஒன் ஈ8 சோனி எக்ஸ்பீரியா இசட் 3 மாடலுடன் ஹார்டுவேர் அம்சங்களில் ஒப்பிட முடியும். இருந்தும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 4ஜி எல்டிஈ இருப்பதோடு நீர் மற்றும் தூசு புகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இப்போதைக்கு சிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனாக எக்ஸ்பீரியா இசட் 3 மாடலை மட்டுமே குறிப்பிட முடியும்.

<center><iframe width="100%" height="643" src="//www.youtube.com/embed/G85l8AjwWqg" frameborder="0" allowfullscreen></iframe></center>

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 முக்கிய சிறப்பம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா இசட் 3 எல்லைகளை கடந்துவிட்டது என்றே சொல்லலாம். எக்ஸ்பீரியா இசட்3 வடிவமைப்பு மட்டுமல்லாமல் அதற்கேற்ற ஹார்டுவேரும் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது. புதிய சோனி எக்ஸ்பீரியா இசட் 3 5.2 இன்ச் ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே (1920*1080) மற்றும் 424 பிபிஐ கொண்டுள்ளது. இசட் 2 மாடலோடு ஒப்பிடும் போது சோனி எக்ஸ்பீரியா இசட் 3 டிஸ்ப்ளே 20% பெரிதாக இருக்கின்றது. டிஸ்ப்ளே பார்க்க அழகாகவும் எழுத்துக்கள் சூரிய ஒளியிலும் பிரகாசமாகவும் கச்சிதமாகவும் தெரிகிறது.

எக்ஸ்பீரியா இசட் 3 மாடலின் இன்டெர்னல் பிராசஸர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் எக்ஸ்பீரியா இசட் 2 மாடலில் இருக்கும் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போனுடன் 3,100 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சோனி எக்ஸ்பீரியா இசட் 3 அபாரமான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா எக்ஸ்3 மாடலின் 20.7 எம்பி கேமரா சந்தையில் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. மற்ற போன்களில் ஐஎஸ்ஓ 800 ஆக இருக்கும் பட்சத்தில் இதில் ஐஎஸ்ஓ12800 ஆக இருக்கின்றது. இது கேமராவில் எடுக்கும் ஓவ்வொரு போட்டோவையும் துள்ளியமாக கொடுக்க வழிவகுக்கும். எக்ஸ்பீரியா இசட் 3 ரியர் கேமராவை கொண்ட 4கே வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இந்த காரணத்தால் தான் வீடியோக்களை எடுக்க எக்ஸ்பீரியா ஸ்மார்ட் போன்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றது.

பிஎஸ்4 ரிமோட் ப்ளே இதன் சிறப்பம்சங்களில் இடம் பிடித்திருக்கின்றது. இது துள்ளியமான பிஎஸ்4 கேம்களை வைபை மூலம் விளையாட அனுமதிக்கும், இதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது பிஎஸ்4 கேம் கண்ட்ரோலர் மட்டுமே.

பயன்படுத்த கச்சிதமான வாட்டர் ஃப்ரூப் ஸ்மார்ட் போனாக எக்ஸ்பீரியா இசட்3 சிறந்தது. எக்ஸ்பீரியா இசட் 2 மாடலுடன் ஓப்பிடும் போது குறைந்த எடையுடன் அதிக சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது சந்தையில் சிறந்த விளங்கும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட எக்ஸ்பீரியா இசட் 3 எந்த வகையில் சிறந்தது என்பதை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia Z3 and Top 10 Rivals: The Difference Between the Best and the Rest. This year, probably, we got see a plethora of flagship smartphone models from the so-called “tier-1” smartphone manufacturers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X