சோனி வெளியிட்ட 20MP கேமரா உள்ள மொபைல்...!

Posted By:

இன்றைக்கு சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைலின் விற்பனையானது நினைத்த அளவிற்கு இல்லை என்றே கூறலாம்.

இதற்கு காரணம் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி(Moto G) ஆகும் 12,500 ரூபாய்க்கு அத்தனை ஆப்ஷன்களுடன் இந்த மொபைலை மோட்டோரோலா வெளியிட்டது.

அது எதிர்பார்த்ததை விட விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது அதேபோல் தற்போது சோனியின் மொபைல் ஒன்றும் அதிகம் பேர் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்பெயர் எக்ஸ்பீரியா Z2 ஆகும் இது வெளியிடப்பட்டு சில மாதங்கள் ஆனாலும் இதன் விற்பனையும் அருமையாகத்தான் நடக்கிறது இதோ அதில் இருக்கும் ஆப்ஷன்களை பற்றி பார்ப்போம்.

சோனி வெளியிட்ட 20MP கேமரா உள்ள மொபைல்...!

5.2 இன்ச் டிஸ்பிளேயுடன் கிடைக்கும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உள்ளது மேலும் இதில் 3GB க்கு ரேம் உள்ளது.

இதன் கேமரா திறன் 20.7MP ஆகும் பிரன்ட் கேமரா 2.2MP கொண்டுள்ள இந்த மொபைலில் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது.

மேலும் இதன் பேட்டரி திறன் 3200mAh ஆகும் இதன் விலை தற்போது ரூ.48,990 ஆகும் மேலும் ஒரு தகவல் இது வாட்டர் ப்ரூப் மொபைல்ங்க.

அடுத்து, இன்னைக்கு ஆபிஸ் ரொம்ப போர் அடிக்குதாங்க இதோ அந்த போரை போக்கும் செம காமெடியான படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க....

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot