சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

Written By:

தற்சமயம் சோனி நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியட்டுள்ளது, அதன்படி சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.49,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.13,990-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.36,399-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் ஐஸ் ப்ளூ, சூடான சில்வர் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் அடிப்படையில் ஒரு 5.2 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ட்ரைலூமினஸ் (Triluminos) டிஸ்ப்ளே கொண்ட ஒரு கருவியாகும்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் கருவியானது அட்ரெனோ 510 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் இணைந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்ட இக்கருவி 256ஜிபி வரையிலாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒளியியல் துறையை பொறுத்தமட்டில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் 19 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும்
செல்பீகளுக்கான 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. மேலும் 4கே வீடியோ பதிவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமரா.

ஒரு 2900எம்ஏஎச் பேட்டரி கொண்ட இக்கருவி அளவீட்டில் 146x72x8.1 மிமீ மற்றும் 161 கிராம் எடையுடையது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் + ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ், என் என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப் சி (யுஎஸ்பி 3.1) போர்ட் ஆகியவைகள் இருக்கும்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அக்கசலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கிரையோஸ்கோப், மேக்னட்டோ மீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகிய சென்சார்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.English summary
Sony Xperia XZs receives a massive price cut of Rs 13600 in India ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot