விரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சோனி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 4கே வீடியோ பதிவு செய்யும் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.9-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2880 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. மேலும கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பா வீடியோ கேம் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications








