Home
Mobile

19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.!

முன்னதாக வெளியானதொரு லீக்ஸ் தகவலின் கீழ் எக்ஸ்பீரீயா XZ3 அல்லது Xperia XZ2எஸ் என்கிற பெயரின் கீழ் வெளியாகும் அடுத்த சோனி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சில வெளிப்படுத்தப்பட்டது.

By Muthuraj

கடந்த பிப்ரவரியில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) வெளியான சோனி ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் நாடாகும் ஐஎஃப்ஏ டெக் வர்த்தக நிகழ்ச்சியிலும் சில அட்டகாசமான சோனி ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

19 + 12 எம்பி ரியர்; 13 எம்பி  செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.!

ஆகஸ்ட் 31 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சோனி எக்ஸ்பீரீயா XZ3 ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக வெளியானதொரு லீக்ஸ் தகவலின் கீழ் எக்ஸ்பீரீயா XZ3 அல்லது Xperia XZ2எஸ் என்கிற பெயரின் கீழ் வெளியாகும் அடுத்த சோனி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சில வெளிப்படுத்தப்பட்டது.

பின்புறம்அமைந்துள்ள செங்குத்தான டூயல் கேமரா.!

பின்புறம்அமைந்துள்ள செங்குத்தான டூயல் கேமரா.!

அதன்படி, கூறப்படும் XZ3 தொஸ்மார்ட்போன் ஆனது முன்னர் வெளியான XZ2 ஸ்மார்ட்போனுடன் வடிவமைப்பில் ஒற்றுப்போகின்றன. எனினும், இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே சில பெரிய வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக XZ3 ஸ்மார்ட்போனின் பின்புறம்அமைந்துள்ள செங்குத்தான டூயல் கேமரா அமைப்பை கூறலாம்.

18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே.!

18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே.!

வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பக்கங்களை பற்றிய புரிதல்களை அறிய முடிகிறது. மேல் பக்கத்தில் உள்ள முழுமையான பெஸல்லெஸ் வடிவமைப்பில் உள்ள இயர்பீஸ் மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள ஒரு செல்பீ கேமரா ஆகியவற்றை காணமுடிகிறது. ஆனால் பக்கங்களில் தடிமனான பெஸல்களை காணமுடிகிறது. ஆகமொத்தம் இந்த ஸ்மார்ட்போன் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

 கேமராக்களின் கீழ் கைரேகை ஸ்கேனர்.!

கேமராக்களின் கீழ் கைரேகை ஸ்கேனர்.!

மேலும் வெளியான புகைப்படத்தின் வழியாக ஸ்மார்ட்போனின் பளபளப்பான பின்பக்கத்தையும் காண முடிகிறது. மேற்குறிப்பிட்ட படி பின்பக்கத்தில் டூயல் கேமரா அமைப்பு காணப்படுகிறது. இரண்டு கேமராக்களுக்கு மேல பிளாஷ் இடம்பெறுகிறது மற்றும் கேமராக்களின் கீழ் கைரேகை ஸ்கேனர் ஒன்று உட்பொதிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துமே மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

 வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கட்டுப்பாடு.!

வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கட்டுப்பாடு.!

ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கட்டுப்பாடு பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. வெளியான புகைப்படங்கள் போலியானதா அல்லது நிஜமானதா என்கிற கேள்விகள் மற்றும் நிரூபணம் எங்குமில்லை என்பதால் இந்த தகவல்களை உப்பின் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

சில பிரீமியம் அம்சங்களை கடன் பெறும்.!

சில பிரீமியம் அம்சங்களை கடன் பெறும்.!

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை சோனி எக்ஸ் பீரீயா XZ3 ஆனது 19-மெகாபிக்சல் + 12-மெகாபிக்சல் மோஷன் ஐ இரட்டை கேமரா அமைப்பு மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் முன் பக்கம் எதிர்கொள்ளும் கேமராவை கொண்டிருக்கும். உடன் XZ2 போன்றே சில பிரீமியம் அம்சங்களை கடன் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 6ஜிபி அளவிலான ரேம் உடனான 128 ஜிபி / 64 ஜிபி.!

6ஜிபி அளவிலான ரேம் உடனான 128 ஜிபி / 64 ஜிபி.!

மேலும் கூறப்படும் சோனி எக்ஸ்பீரீயா XZ3 ஆனது (வதந்திகளின்படி) 5.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி , 6ஜிபி அளவிலான ரேம் உடனான 128 ஜிபி / 64 ஜிபிஉள்ளடக்க சேமிப்பு விருப்பம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஐபி 68 சான்றிதழ் உடல் மற்றும் 3240 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும். மேலும் பல புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ3 Leaked Hands-On Photos Reveal Design and Dual Cameras. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X