டூயல் கேமரா வசதியுடன் களமிறங்கும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 ஸ்மார்ட்போன் மாடலை ஐஎப்ஏ 2018-நிகழ்சியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சோனி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சோனி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 ஸ்மார்ட்போனில் 19எம்பி+ 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3240எம்ஏஎச்:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 ஸ்மார்ட்போனில் 3240எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications