டூயல் கேம் & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ.!
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
தற்சமயம் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சோனி ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தும் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு விவரங்கள் தற்சமயம் ஆன்லைன் வெளிவந்துள்ளது.

திரைவிகிதம்:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:
இந்த சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்புஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications