டூயல் கேமராவுடன் அசத்தும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 பிரீமியம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 பிரீமியம் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரோம் பிளாக், க்ரோம் சில்வர் விருப்பங்களை கொண்டு சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 பிரீமியம்; ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 :
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2160×3840 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.அதன்பின் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்பு மற்றும் ஆப் வசதிகளுக்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எச்டிஆர் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார், டூயல்-சிம், வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3450எம்ஏஎச்:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் 3450எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்
பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications