விரைவில் வெளிவரும் அசத்தலான சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2.!
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4கே தீர்மானம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
கடந்த ஆண்டு சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த மாதம் 26-ம் தேதி நடைபெறும் மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் சோனி நிறுவனம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேமரா அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4கே தீர்மானம்:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4கே தீர்மானம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3420எம்ஏஎச்:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications