இந்தியா : அட்டகாசமான சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 அறிமுகம்.!
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சோனி நிறுவனம் இப்போது சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாக உள்ளது, இருந்தபோதிலும் பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ஸ்மார்ட்போன் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 835செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆப் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவருகிறது இந்த எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 8.0:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

19எம்பி ரியர் கேமரா;
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 ஸ்மார்ட்போன் 3D ஸ்கேனிங் கேமரா கொண்டுள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனில் 19எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, ஜிபிஎஸ் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2700எம்ஏஎச்:
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 பொறுத்தவரை 2700எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications