ரூ.10000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சோனி ஸ்மார்ட்போன்.!

ஒரு 1/2.3-அங்குல எக்ஸ்மோர் ஆர்எஸ் நினைவகம் அடுக்கப்பட்ட சென்சார் கொண்ட இதன் வீடியோ கேமரா விநாடிக்கு 960 பிரேம்கள் என்ற செயல்திறன் கொண்டுள்ளது.

|

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படுகிறது, அந்தவகையில் தற்சமயம் சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சோனி ஸ்மார்ட்போன்.!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.59,990-ஆக இருந்து தற்சமயம் ரூ.10000-வரை விலைகுறைக்கப்பட்டு, 49,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1:

இப்போது சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.5000-வரை விலைகுறைப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு தற்சமயம் ரூ.5000-வரை விலைகுறைப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்  கேமரா:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் கேமரா:

செல்பீ கேமராவைப் பொறுத்தவரை, சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் 13 மெகாபிக்சல் 1/3.06 அங்குல எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் கொண்டிருக்கிறது. இது 22மிமீ வைட்-கோணம் எஃப் / 2.0 லென்ஸுடன் இணைந்துள்ளது. நிறுவனம் அதன் ஸ்டீடி ஷாட் தொழில்நுட்பத்தையும், 5-ஆக்சிஸ் நிலைப்படுத்தல் உடன் இரண்டு கேமிராக்களிலும் புகுத்தியுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக ஒரு ஐபி65/68 தரவரிசை கொண்ட தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுடன் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பக்கமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ கேமரா:

வீடியோ கேமரா:

ஒரு 1/2.3-அங்குல எக்ஸ்மோர் ஆர்எஸ் நினைவகம் அடுக்கப்பட்ட சென்சார் கொண்ட இதன் வீடியோ கேமரா விநாடிக்கு 960 பிரேம்கள் என்ற செயல்திறன் கொண்டுள்ளது. முன்னறிவிப்பான கலப்பின ஆட்டோஃபோகஸ் மற்றும் முன்கணிப்பு பதிவு ஆகிய அம்சங்களையும் இதன் கேமரா வழங்குகிறது.

  ஸ்னாப்ட்ராகன் 835

ஸ்னாப்ட்ராகன் 835

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்ட இக்கருவி 4ஜி வோல்ட, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி (3.1) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

மேலும் இக்கருவி குவால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் கொண்ட 3230எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அளவீடுகளில் 156x77x7.9 மிமீ மற்றும் 191 கிராம் எடையுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XZ Premium, Xperia XA1 Ultra, Xperia XA1 Plus Price Cut in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X