Subscribe to Gizbot

இந்தியாவில் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் பிரீமியம் அறிமுகம் (விலை, அம்சங்கள்).!

Written By:

இந்தியாவில் அதன் முதல் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ஸ்மார்ட்போன் ஒன்றை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வெளியாகியுள்ள சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் பிரீமியம் ஆனது ஜூன் 12 முதல் இந்தியாவில் ரூ.59,990/- (வாங்க சிறந்த விலையில்) விற்பனைக்கு வருகிறது. இக்கருவி சோனி மையத்திலிருந்து கிடைக்கிறது உடன் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அமேசான்.காம் வலைத்தளத்திலும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் சோனி எக்ஸ்பிரீயா எக்ஸ்இசெட் பிரீமியம் அறிமுகம்.!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் கருவியின் முன்பதிவு ஜூன் 2, வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 11 வரை நீடிக்கும். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி20 வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கரை (ரூ.8,990-) இலவசமாக பெறலாம் மற்றும் சோனி நிறுவனம் இக்கருவியை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.349/- மதிப்புள்ள மூன்று மாத எல்ஐவி (LIV) சந்தாவுடன், 5,200 விளையாட்டு-விளையாட்டு வரவுகளுடன் கேம்லோஃப்டின் நவீன காம்பாட் 5 முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

முதலில் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் கருவியின் உயர் இறு,தி அம்சமாக ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி தொகழ்கிறது. தவிர வேறு சிறப்பம்சமாக அதன் கேமரா உள்ளது, 19-மெகாபிக்சல் மோஷன் ஐ கேமரா கொண்டுள்ளது. ஒரு 1/2.3-அங்குல எக்ஸ்மோர் ஆர்எஸ் நினைவகம் அடுக்கப்பட்ட சென்சார் கொண்ட இதன் வீடியோ கேமரா விநாடிக்கு 960 பிரேம்கள் என்ற செயல்திறன் கொண்டுள்ளது. முன்னறிவிப்பான கலப்பின ஆட்டோஃபோகஸ் மற்றும் முன்கணிப்பு பதிவு ஆகிய அம்சங்களையும் இதன் கேமரா வழங்குகிறது. மற்ற கேமரா சிறப்பம்சங்களாக அதன் 25மிமீ எப் / 2.0 லென்ஸ் மற்றும் 1.22 மைக்ரான் பிக்சல் சென்சார் ஆகியவைகள் அடங்கும்.

செல்பீ கேமராவைப் பொறுத்தவரை, சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் 13 மெகாபிக்சல் 1/3.06 அங்குல எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் கொண்டிருக்கிறது. இது 22மிமீ வைட்-கோணம் எஃப் / 2.0 லென்ஸுடன் இணைந்துள்ளது. நிறுவனம் அதன் ஸ்டீடி ஷாட் தொழில்நுட்பத்தையும், 5-ஆக்சிஸ் நிலைப்படுத்தல் உடன் இரண்டு கேமிராக்களிலும் புகுத்தியுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக ஒரு ஐபி65/68 தரவரிசை கொண்ட தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுடன் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பக்கமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சோனி இந்தியாவில் அறிமுகம் செய்யும் எக்ஸ்இசெட் பிரீமியம் கருவியில் இரட்டை சிம் (நானோ சிம்) மாறுபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. மற்றும் ஒரு எஸ்ஆர்ஜிபி (sRGB) 138 சதவிகிதம் ஸ்பெக்ட்ரம் மற்றும் மொபைல் டிஸ்பிளே என்ஜீனுக்கான எக்ஸ்-ரியாலிட்டி கொண்ட 5.5 அங்குல 4கே (2160x3840 பிக்சல்கள்) எச்டிஆர் ட்ரைலூமினஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்ட இக்கருவி 4ஜி வோல்ட, வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி (3.1) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.

மேலும் இக்கருவி குவால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் கொண்ட 3230எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அளவீடுகளில் 156x77x7.9 மிமீ மற்றும் 191 கிராம் எடையுள்ளது.

Read more about:
English summary
Sony Xperia XZ Premium Launched in India: Price, Release Date Specifications, and More. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot